சங்ககிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சங்ககிரி
—  பேரூராட்சி  —
சங்ககிரி
இருப்பிடம்: சங்ககிரி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°29′N 77°52′E / 11.48°N 77.87°E / 11.48; 77.87ஆள்கூற்று: 11°29′N 77°52′E / 11.48°N 77.87°E / 11.48; 77.87
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 27,402 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
இணையதளம் www.sankagiri.com


சங்ககிரி என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சியாகும். சங்ககிரியில் உள்ள மலை சங்கு போல உள்ளதால் இது சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. இது சங்ககிரி சட்டமன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டதாகும்.

சங்ககிரி மலை

பொருளாதாரம்[தொகு]

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் வேளாண்மையைச் சார்ந்திருந்தது. தற்பொழுது சரக்குந்து தொழிலையே நம்பி உள்ளது. பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(lorry body building)கட்டும் மனைகளே உள்ளது. சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.

சங்ககிரியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒருக்காமலை

வரலாறு[தொகு]

சங்ககிரி மலை திப்பு சுல்தானின் கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார். தற்பொழுது இம்மலைக்கோட்டையானது எந்த ஒரு பராமரிப்பும் செய்யப்படாமல் கவனிப்பின்றி இருக்கிறது.

இந்த ஊரை அடுத்து இருந்த ஐவேலி என்னும் ஊரில் அசதி என்னும் இடையன் வாழ்ந்துவந்தான். இவன் ஔவையாருக்குப் பொற்கலத்தில் விருந்தளித்தான். இந்த அசதியைப் போற்றிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் அசதிக்கோவை என்னும் நூலைப் பாடியுள்ளார். [4]

மேற்கோள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. கொங்கு மண்டல சதகம், பாடல் 45, முனைவர் ந ஆனந்தி உரை

வெளிப்பார்வை[தொகு]

அசதிக் கோவை பாடல் 45

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்ககிரி&oldid=2506471" இருந்து மீள்விக்கப்பட்டது