சங்கு
சங்கு (Conch, /ˈkɒntʃ/ / /ˈkɒŋk/)[1] என்பது நடுத்தரம் முதல் பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
சங்குகள் எனப்படும் குழுக்கள் கடல்வாழ் குடற்காலி மெல்லுடலிகள் ஸ்ரோம்பியாடே குடும்பத்தைச் சேர்ந்தவை.
வேறுபல இனங்களும் சங்கு என்றே அழைக்கப்படுகின்றன. பொதுவாக சங்கு என அழைக்கப்படும் இனங்களாக, தெய்வீகச் சங்கு அல்லது இன்னும் தெளிவாக ஊதப் பயன்படும் சங்கின் ஓடு (வெண் சங்கு) உட்பட டேபினெலே இனங் சங்குகள் காணப்படுகின்றன.
நம் நாட்டுச் சங்கை வலம்புரிச்சங்கு, இடம்புரிசங்கு, சலஞ்சலம் பாஞ்ச சன்னியம் எனப் பலவகையாகப் பிரித்துள்ளர். வலம்புரிச் சங்கு அரிதானது. ஆயினும் சலஞ்கலம், பாஞ்ச சன்னியம் ஆகிய இவ்விரண்டும் மிகமிக அபூர்வமானது. பொதுவாக சங்கில் 80 திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. போர் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. ஓரோட்டு உடலியம் கொண்ட சங்குகள் பசிபிக் பெருங்கடலில் அதிகம் கிடைக்கின்றன. இதில் கைவினைப்பொருட்கள் சங்குமாலைகள் போன்றவை செய்யப்படுகின்றன.[2]
மேலும் படிக்க[தொகு]
உசாத்துணை[தொகு]
![]() |
விக்சனரியில் சங்கு என்னும் சொல்லைப் பார்க்கவும். |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "§ 51. conch.no 7. Pronunciation Challenges. The American Heritage Book of English Usage. 1996". 2009-02-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-08-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ அறிவுப் பேழை கவிஞா் நஞ்சுண்டன் முதற்பதிப்பு ஜுலை 1999 கலா பதிப்பபகம்
வெளி இணைப்புகள்[தொகு]
"Conch". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.