வாளையார்
வாளையார்
വാളയാർ Walayar | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 10°50′34″N 76°50′20″E / 10.8428°N 76.8388°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
மொழிகள் | |
• அதிகாரபூர்வம் | மலையாளம், ஆங்கிலம்[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் | 678624 |
தொலைபேசிக் குறியீடு | 04915 |
வாகனப் பதிவு | KL-09 |
அண்மைய நகரம் | பாலக்காடு, கோயம்புத்தூர் |
மக்களவைத் தொகுதி | பாலக்காடு |
காலநிலை | வெப்பமண்டல பருவமழை (கோப்பென்) |
சராசரி கோடை வெப்பநிலை | 40 °C (104 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 20 °C (68 °F) |
வாளையார் (Walayar) இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் மற்றும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு எல்லை நகரமாகும். கேரளா - தமிழ்நாடு மாநிலங்களின் தணிக்கைச் சாவடிகள் இங்கு அமைந்துள்ளன. இது சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை 544 இல் பாலக்காட்டிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், கோயம்புத்தூர் தொடருந்து நிலையத்திலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]வாளையார் ஒரு வளர்ந்து வரக்கூடிய சிறிய நகரம் ஆகும். இந்த இடம் தமிழக, கேரள எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் வணிகவரித்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் ஆயத்தீர்வை ஆகியவற்றுக்கான சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. கேரளாவிற்கு அனுப்பப்படும் பெரும்பாலான சரக்குகள் இந்த வழியிலேயே செல்வதால் இந்த இடம் அதிக போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் போன இடமாக விளங்குகிறது. ஆனால், தற்போது வலயார் முதல் வடக்கஞ்சேரி வரை தேசிய நெடுஞ்சாலையானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாலும், சேவைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாலும் நிலைமை மாறியுள்ளது. மேலும், சரக்குந்துகளுக்கு சுங்கச்சாவடிகளுக்கு நுழையக்கூடிய இடத்திலிருந்து, வரி செலுத்தி வெளிவரும் வரையிலும் வாகனங்களுக்குத் தனியான பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே பயணிகள் வாகனங்கள் இடையூறின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி 2015 ஆம் ஆண்டு முடிவுற்றது. இதர மாநிலங்களிலிருந்து வரும் பெரும்பாலான பயணிகள் வாகனங்கனான பேருந்துகள், மகிழ்வுந்துகள், சுற்றுலா வாகனங்கள் இந்த வழியிலேயே செல்கின்றன. வலயாரின் தொடருந்து நிலையமானது தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.