வதம்பச்சேரி ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வதம்பசேரி ஊராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வதம்பச்சேரி காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம்.
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி, இ. ஆ. ப. [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி கோயம்புத்தூர்
மக்களவை உறுப்பினர்

பி. ஆர். நடராஜன்

சட்டமன்றத் தொகுதி சூலூர்
சட்டமன்ற உறுப்பினர்

வி. பி. கந்தசாமி (அதிமுக)

மக்கள் தொகை 5,405
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் வதம்பச்சேரி ஊராட்சி (Vadambacheri Gram Panchayat), தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4] இந்த ஊராட்சி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த ஊராட்சியானது கோவை மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஊராட்சி ஆகும். மேலும் இந்த ஊராட்சி மக்கள் தங்களது மாவட்ட தலைநகரை அணுகவும் வட்ட தலைநகரை அணுகவும் பெருத்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் இந்த ஊராட்சியை திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் மாவட்ட தலைநகரம் 30கி.மீ உள்ளும் வட்ட தலைநகர் பல்லடத்திற்கு செல்ல 15 கி.மீ தூரம் சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதுவே கோவை அல்லது சூலூரை அணுக சரியான போக்குவரத்து பேருந்து வசதி இல்லை. இதுவே திருப்பூருக்கு இங்கிருந்து மக்கள் காமநாயக்கன் பாளையம் சென்று பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுவதால் எளிதில் திருப்பூர் மற்றும் பல்லடம் செல்லலாம். எனவே அரசு உடனடியாக மக்கள் கோரிக்கை ஏற்று வதம்பச்சேரி ஊராட்சியை திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமீபகாலமாக மக்கள் மனதில் எழுந்துள்ளது. [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5405 ஆகும். இவர்களில் பெண்கள் 2698 பேரும் ஆண்கள் 2707 பேரும் உள்ளனர்.மேலும் பேருந்து போக்குவரத்து காமநாயக்கன் பாளையம் நகரை இணைக்கிறது. மேலும் காமநாயக்கன் பாளையம் 4 கி.மீ தொலைவில் உள்ளது.இவ்வூரில் அமைந்துள்ள நெல்லுக்குப்பம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

அடிப்படை வசதிகள்[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 1850
சிறு மின்விசைக் குழாய்கள் 7
கைக்குழாய்கள் 18
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 21
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 6
உள்ளாட்சிக் கட்டடங்கள் 44
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7
ஊரணிகள் அல்லது குளங்கள் 8
விளையாட்டு மையங்கள்
சந்தைகள் 2
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 53
ஊராட்சிச் சாலைகள் 10
பேருந்து நிலையங்கள் காமநாயக்கன் பாளையத்தில் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 10

சிற்றூர்கள்[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:

  1. சக்திநகர்
  2. சின்ன வதம்பச்சேரி
  3. எம். ஜி. ஆர் நகர்
  4. வி. மேட்டூர்
  5. வி. மேட்டூர் காலனி
  6. கவுண்டம்பாளையம்
  7. நல்லூர் பாளையம்
  8. நல்லூர் பாளையம் ஆ.தி.காலணி
  9. நல்லிகவுண்டம்பாளையம்
  10. ஓடக்கல்பாளையம்
  11. ஓடக்கல்பாளையம் காலனி
  12. பெரிய வதம்பச்சேரி
  13. சௌடேஸ்வரி நகர்
  14. வி. வடுகபாளையம்
  15. எஸ். ஆர். சி காலனி
  16. காந்திநகர்
  17. காமநாயக்கன் பாளையம் (தெற்கு)
  18. கணபதி நகர்
  19. சக்தி அவென்யூ
  20. வாரப்பட்டி பிரிவு

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  5. 5.0 5.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  6. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வதம்பச்சேரி_ஊராட்சி&oldid=2996329" இருந்து மீள்விக்கப்பட்டது