காரணம் பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காரணம் பேட்டை என்பது தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் வட்டாரத்தில் கோடாங்கிபாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள நகரமாகும். இங்கு திருச்சி முதல் கோயம்புத்தூர் வரை தேசிய நெடுஞ்சாலையும், அன்னூர் முதல் காமநாயக்கன் பாளையம் வரை மாநில நெடுஞ்சாலையும் இணைக்கும் நகரமாக இது விளங்குகிறது. இங்கிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது.

கோடாங்கிபாளையம்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் க. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி கோயம்புத்தூர்
மக்களவை உறுப்பினர்

பி. ஆர். நடராஜன்

சட்டமன்றத் தொகுதி பல்லடம்
சட்டமன்ற உறுப்பினர்

அ. நடராஜன் (அதிமுக)

மக்கள் தொகை 4,561
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மக்கள் தொகை[தொகு]

2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இவ்வூரில் 4,561 பேர் வசிக்கின்றனர். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் வசிக்கின்றனர்.[சான்று தேவை] பல்லடம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

மத்திய அரசின் விமான படை மற்றும் பயிற்சி தளம் இங்குதான் அமைந்துள்ளது. மேலும் திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மார்த்தாண்டம், சிவகங்கை, கம்பம், தேனி, நாகப்பட்டினம்,திருவாரூர், தஞ்சாவூர், கரூர், அன்னூர், காமநாயக்கன் பாளையம், சத்தியமங்கலம், கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், நீலகிரி, அரியலூர், பெரம்பலூர் என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது. மேலும் கோவை பெருநகர மாநகராட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி கோவை சிங்காநல்லூர் முதல் காரணம் பேட்டை வரை இத்திட்டம் செயல்படுத்த அரசு வரைபட அறிக்கை தயாரித்துள்ளது. மிகுந்த போக்குவரத்து வசதி இருந்ததால், இவ்வூரில் பேருந்து நிலையம் அமைக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை பெருநகர மாநகராட்சியின் மாநகர போக்குவரத்து கழகம் பேருந்துகள் காரணம் பேட்டை வரை வந்து செல்ல 1992 ஆம் ஆண்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கையெழுத்து இட்டது குறிப்பிடத்தக்கது.

கோடாங்கிபாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்கள்[தொகு]

  • கோடாங்கிபாளையம்
  • காரணம் பேட்டை

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரணம்_பேட்டை&oldid=3014418" இருந்து மீள்விக்கப்பட்டது