உள்ளடக்கத்துக்குச் செல்

மருதமலை

ஆள்கூறுகள்: 11°2′46″N 76°51′7″E / 11.04611°N 76.85194°E / 11.04611; 76.85194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருதமலை நுழைவாயில்
மருதமலை
—  மலை  —
மருதமலை
அமைவிடம்: மருதமலை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°2′46″N 76°51′7″E / 11.04611°N 76.85194°E / 11.04611; 76.85194
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
மருதமலை முருகன் கோயில் கி.பி 12-ஆம் நூற்றாண்டில் கொங்கு மன்னர்களால் கட்டப்பட்டது. மூலவர் தண்டாயுதபாணி சிலை, பாம்பாட்டி சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மருதமலை முகடு

மருதமலை (ஆங்கிலம்: Marudhamalai) தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியிலுள்ள[4] ஒரு மலை ஆகும். இது கோயம்புத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. ஆனால் இது தற்போது கோவை மாநகராட்சியின் வார்டு எண் 17-இல் இணைக்கப்பட்டுள்ளது.

கோவில் வரலாறு

[தொகு]

இங்குள்ள முருகன் கோயில் முருகனின் ஏழாம் படைவீடாகக் கருதப்படுகிறது. இக்கோவில் மிகவும் பழமையானது. திருமுருகன்பூண்டி சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் மருதமலை முருகன் கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளது. கி.பி 12-ஆம் நூற்றாண்டில்தான் மருதமலை முருகன் கோவில் கட்டப்பட்டது என்று கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளது. மருதமலை முருகன் கோயில் 1,200 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு அருகிலேயே பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோயில் முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் இன மன்னர்களின் சொத்தாக விளங்கியது.[5] முருகக் கடவுளின் பிற கோயில்களைப் போலவே மருதமலை கோயிலும் மேற்குத் தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது. மருதமலை முருகன் கோவில் கி.பி 12-ஆம் நூற்றாண்டில் கொங்கு மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த மருதமலை முருகன் மூலவர் தண்டாயுதபாணி சிலை 18 சித்தர்களின் ஒருவர் பாம்பாட்டிச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மருதமலை முருகன் கோயிலின் முன்தோற்றம் (புனரமைப்புக்கு முன்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. Retrieved 2013-07-08.
  5. http://tamil.nativeplanet.com/coimbatore/attractions/marudhamalai/
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Maruthamalai Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதமலை&oldid=4431623" இலிருந்து மீள்விக்கப்பட்டது