சிங்காநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிங்காநல்லூர் நகராட்சி

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓர் நகராட்சி ஆகும். கோயம்புத்தூர் மாநகராட்சியானது 4 பெரு நகராட்சிகளை உள்ளடக்கியது.அவற்றுள் இதுவும் ஓர் நகராட்சி ஆகும். கோவை மாநகராட்சிட்குள் உள்ள நகராட்சிகளுள் இதுவே பெரிய நகராட்சி ஆகும். மேலும் சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகும்.இது கோயம்புத்தூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும். முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்கள் சிங்காநல்லூரில் சிறிது காலம் வசித்தது குறிப்பிடத்தக்கது.

சிங்காநல்லூர் குளம்[தொகு]

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சியில் தான் இந்த குளம் பராமரிப்பு செலவு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.மேலும் இந்த குளம் 120 ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்து ஆணை பிறப்பித்தவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆவார். பின் இந்த குளத்தின் அருகில் கோவையில் 19ம் நூற்றாண்டு பிற்பகுதியில் ப்ளேக் நோய் என்னும் கொடிய காய்ச்சல் பரவியது. இதனால் அந்த நோயை தீர்க்கும் விதத்தில் ப்ளேக் மாரியம்மன் திருக்கோயில் இக்குளத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2001ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி சிங்காநல்லூர் நகராட்சியில் 5,43,871 பேர் வசிக்கின்றனர். இவற்றில் ஆண்கள் 53% பேரும் 47% பேர் பெண்களும் இருக்கின்றனர்.மேலும் இது 1991ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விட 43.02% அதிகம். மேலும் கோவை மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 42,24,107 பேர் என்பது மாநகராட்சி இணையதளம் குறிப்பிடுகிறது.

பேருந்து நிலையம்[தொகு]

கோயம்புத்தூர் மாநகராட்சியில் அமைந்துள்ள 10 பேருந்து நிலையங்களில் இதுவும் ஒரு பேருந்து நிலையம் ஆகும். இங்கிருந்துதான் தமிழகத்தின் புறநகர் பேருந்துகள் செல்கிறது. இங்கு

  1. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-கும்பகோணம்
  2. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-மதுரை
  3. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-கோயம்புத்தூர்
  4. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-திருநெல்வேலி

என தமிழக போக்குவரத்து சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும் உள்ளூர் சேவைகளை மாநகர் போக்குவரத்து கழகம்-கோவை வழங்குகிறது. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, ஏர்வாடி, வள்ளியூர் குற்றாலம், ராஜபாளையம், விருதுநகர், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை,மேலூர்,உசிலம்பட்டி, தேனி,வத்தலக்குண்டு,செம்பட்டி, தாராபுரம், பல்லடம், காங்கேயம், வெள்ளகோவில், கரூர், குளித்தலை,திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்,வேளாங்கண்ணி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், ஜெயம் கொண்டம், துறையூர், புதுக்கோட்டை, பரமக்குடி, காரைக்குடி,பெரியகுளம், சிவகங்கை, மணப்பாறை, குமுளி, கம்பம் என தமிழக தென்பகுதிகளுக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வசதிகள்[தொகு]

சாந்தி சமூக சேவை[தொகு]

உழவர் சந்தை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்காநல்லூர்&oldid=2946749" இருந்து மீள்விக்கப்பட்டது