நயினார் நாகேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நயினார் நாகேந்திரன்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
02 மே 2021
தொகுதி திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 16, 1960(1960-10-16)
பணகுடி, தண்டையார்குளம், திருநெல்வேலி
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சந்திரா
பிள்ளைகள் நயினார் பாலாஜி
விஜய் சண்முக நயினார்
காயத்ரி

நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) என்பவர் இந்திய அரசியல்வாதி. பாரதிய ஜனதா கட்சியைச்  சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001ல் திருநெல்வேலியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1] மேலும் 2011 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்ட எதிர் போட்டியாளர் ஏ. எல். எஸ். லஷ்மணன் என்பவரிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் இதே தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்ட ஏ. எல். எஸ். லஷ்மணன் என்பவரை 3800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.[2] இந்தத் தேர்தல்களில் இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டார். நயினார் நாகேந்திரன் 2001-2006வரை நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க கட்சி ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.[சான்று தேவை] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த இவர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாரளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பினை இழந்தார்.[3][4] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து, பாசக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "DMK, allies make a comeback in Tirunelveli district". The Hindu. 20 May 2016. http://www.thehindu.com/elections/tamilnadu2016/dmk-allies-make-a-comeback-in-tirunelveli-district/article8623532.ece. பார்த்த நாள்: 2017-05-15. 
  3. "General Elections to Lok Sabha – 2019". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2021-06-05.
  4. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. Retrieved 2 June 2019.
  5. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயினார்_நாகேந்திரன்&oldid=3163948" இருந்து மீள்விக்கப்பட்டது