க. கிருஷ்ணசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர் க. கிருஷ்ணசாமி
நிறுவன தலைவர், புதிய தமிழகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 3, 1952 (1952-04-03) (அகவை 71)[1]
மசக்கவுண்டர் புதூர், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம் [2]
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபுதிய தமிழகம்[3]
துணைவர்வி.வி. சந்திரிகா[4]
பிள்ளைகள்கி. சங்கீதா ஓம்நாத், ஷ்யாம் கிருஷ்ணசாமி[5]
பெற்றோர்கருப்புசாமி - தாமரை அம்மாள்[6] [7]
வாழிடம்குனியமுத்தூர் கோயமுத்தூர்
கல்விபள்ளி': அரசினர் உயர்நிலைப் பள்ளி பூளவாடி (பள்ளிஇறுதிவரை)

புகுமுக வகுப்பு: அரசினர் கலைக்கல்லூரி, கோயமுத்தூர்

மருத்துவக்கல்வி:திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி (1972–75)(இரண்டு ஆண்டுகள் மட்டும்), மதுரை மருத்துவக் கல்லூரி(1975–78)(மூன்று ஆண்டுகள்) மருத்துவக்கல்லூரியில் இளநிலை மருத்துவப்பட்டம், கோவை மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருந்தியல் பட்டம் (1982–84)
இணையத்தளம்http://ptparty.org/

கிருஷ்ணசாமி (K. Krishnasamy) ஒரு தமிழக அரசியல்வாதி, இவர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் ஆவார்.

இளமை பருவம்[தொகு]

கிருஷ்ணசாமி பழைய கோயமுத்தூர் மாவட்டம், இன்றைய திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுக்கா, குடிமங்கலம், மசக்கவுண்டர் புதூர்[8] எனும் சிற்றூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1952-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 04-ஆம்[1] நாள் பிறந்தார். தந்தை கருப்புசாமி குடும்பனார் ஒரு விவசாயி. தாய் தாமரையம்மாள் [9] ஒரு இல்லத்தரசி. உயர்நிலை பள்ளிப்படிப்பினை பூளவாடி[10] என்ற ஊரிலும், புகுமுக வகுப்பினை அரசினர் கலைக்கல்லூரியிலும் முடித்தார்[11]. பின்னர் கோயமுத்தூர் வேளாண்மைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தில் வேளாண் படிப்பில்சேர்ந்தார். அங்கே 45-நாட்கள் மட்டுமே கல்வி பயின்றார். வேளாண்மைப் பல்கலைக் கழக துணை முதன்மையர் முனைவர் தானியல் சுந்தராசு அறிவுறுத்தலின்படி[12] வேளாண்மைக் கல்வியைத் தொடராமல் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் (1972–75) இளநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கே இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயின்று, கல்லூரி இடமாறுதல் அனுமதி பெற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் (1975–78) மூன்றாம் ஆண்டு துவங்கி பயிற்சி மருத்துவர் பணி வரை இங்கேயே மருத்துவ கல்வி கற்றார். முதுநிலை மருத்துவத்தை கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரியில் (1982–84) முடித்தார்[13].

அரசியல் வாழ்க்கை[தொகு]

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியன்குளம் என்கிற ஊரில் சாதிய வன்முறை ஏற்பட்டபோது, கோயம்புத்தூரில் இருந்து வந்து பாதிக்கப்பட்ட தேவேந்திர குல மக்களுக்காக வாதாடியவர்.[14] மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர் விடுதலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 23 சூலை 1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்பொழுது காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு காரணமாக சிதறி ஓடிய மக்கள், தப்பிக்க தாமிரபரணி நதிக்குள் குதித்தனர். இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.

இவர் 1996 தேர்தலில் கொடியன்குளத்தை உள்ளடக்கிய ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[15] பின்னர் இரண்டாவது முறையாக 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.[16] [17], அதே போல் தென்காசி தொகுதியில் 5 முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை அடைந்துள்ளார்[18] தேவேந்திர குல மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து இவரும் இவரது கட்சியும் செயலாற்றி வருகின்றன.

போராட்டங்கள்[தொகு]

  • விழுப்புரம் 12 தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை, அதன் தொடர்ச்சியாக 22 சனவரி 1984 அன்று கைது செய்து மதுரை சிறையில் அடைப்பு.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "பிறந்த நாள் குறித்த குறிப்பு". Archived from the original on 2016-08-03. பார்க்கப்பட்ட நாள் 2016-11-05.
  2. "பிறந்த இடம் குறித்த சான்று". Archived from the original on 2022-03-15. பார்க்கப்பட்ட நாள் 2016-11-06.
  3. "welcome to Puthiya Tamilagam Party's Offcial Website".
  4. "வாழ்க்கை துணை குறித்த சான்று".
  5. "குழந்தைகள் குறித்த சான்று".
  6. "பெற்றோர் குறித்த சான்று".[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "பெற்றோர் குறித்த சான்று". Archived from the original on 2022-03-15. பார்க்கப்பட்ட நாள் 2016-11-06.
  8. "பிறந்த இடம் குறித்த சான்று". Archived from the original on 2016-08-03. பார்க்கப்பட்ட நாள் 2016-11-05.
  9. "பெற்றோர் குறித்த சான்று".
  10. "பள்ளிக்கல்வி குறித்து".[தொடர்பிழந்த இணைப்பு]
  11. "மேல்நிலை கல்வி". Archived from the original on 2016-08-03. பார்க்கப்பட்ட நாள் 2016-11-05.
  12. "விவசாய கல்வி". Archived from the original on 2016-08-03. பார்க்கப்பட்ட நாள் 2016-11-05.
  13. "மருத்துவ கல்வி". Archived from the original on 2016-08-03. பார்க்கப்பட்ட நாள் 2016-11-05.
  14. "கொடியன்குளம் சாதிய வன்முறை".
  15. "முதல் முறை சட்டமன்ற உறுப்பினர் குறித்த குறிப்பு".
  16. "இரண்டாம் முறை சட்டமன்ற உறுப்பினர் குறித்த குறிப்பு".
  17. "இரண்டாம் முறை சட்டமன்ற உறுப்பினர் குறித்த குறிப்பு".
  18. "நாடாளுமன்ற போட்டி குறித்த குறிப்பு".[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._கிருஷ்ணசாமி&oldid=3812958" இலிருந்து மீள்விக்கப்பட்டது