எல். முருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எல். முருகன்
மாநில தலைவர் பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 மார்ச் 2020
தனிநபர் தகவல்
பிறப்பு மே 29, 1977 (1977-05-29) (அகவை 43)
கோனூர், பரமத்தி, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை
பணி * வழக்கறிஞர்

எல். முருகன் (L. Murugan, பிறப்பு: 29 மே, 1977) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 11 மார்ச், 2020 அன்று நியமிக்கப்பட்டார்.[1][2]

இவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நன்றாகத் தெரியும்.[3][4] இவர் தெலுங்கு பேசும் அருந்ததியர் குடும்பத்தில் பிறந்தார்.[5][6] 1977இல் பிறந்த இவர், தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த கோனூரைச் சேர்ந்தவர்.[7] 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்ட இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலை பட்டத்தையும் அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். மேலும் இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._முருகன்&oldid=2981746" இருந்து மீள்விக்கப்பட்டது