உள்ளடக்கத்துக்குச் செல்

பா. சரவணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா. சரவணன் (P. Saravanan) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 15 ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார்.[1] இவர் ஒரு மருத்துவர். மதுரையில் நரிமேடு பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். 2019 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.[2] இந்தத் தேர்தலில் மருத்துவர் பா. சரவணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் முனியாண்டியை விட 2396 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.[3] 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்காததால், அதிருப்தியடைந்த அவர், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.[4]

திரைத்துறை பங்களிப்பு

[தொகு]

இவர் முன்னதாக 'அகிலன்', 'சரித்திரம் பேசு' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து வெளிவரவுள்ள தமிழ்த்திரைப்படம் 'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்' ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் (15 ஆவது சட்டமன்றம்)". தமிழ்நாடு அரசு. Retrieved 14 சூன் 2019.
  2. "திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்புமனு தாக்கல்". தினத்தந்தி. 26 ஏப்ரல் 2019. Retrieved 14 சூன் 2019.
  3. "Tamil Nadu By Election Results : துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்". இந்தியன் எக்ஸ்பிரஸ். 23 மே 2019. Retrieved 14 சூன் 2019.
  4. "பாஜகவில் இணைந்த இரண்டாவது திமுக எம்.எல்.ஏ! - கு.க.செல்வத்தையடுத்து திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணனும் பாஜகவில் இணைந்தார்!". நியூஸ் 18 தமிழ். 14 மார்ச் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._சரவணன்&oldid=3943901" இலிருந்து மீள்விக்கப்பட்டது