கே. பாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. பாலகிருஷ்ணன்
பதவியில்
மே, 2011 - 2016
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 5, 1953(1953-02-05)
அண்ணாமலைநகர், சிதம்பரம், கடலூர், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
இருப்பிடம் சிதம்பரம், தமிழ்நாடு, இந்தியா
பணி அரசியல்வாதி

கே. பாலகிருஷ்ணன் என்பவர் ஓர் இந்திய  அரசியல்வாதி ஆவார். இவர் சிதம்பரம் தொகுதியில் இருந்து 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்துக்கு இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவற் தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநிலப் பொதுச்செயலாளராக உள்ளார்.[1]

வாழ்க்கை[தொகு]

பாலக்கிருஷ்ணன் தன் பள்ளி மாணவர் பருவத்தில் இந்தி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்றபோது அவரது கல்லூரி காலத்தில் பொதுவுடமை இயக்கத்தின் அறிமுகம் ஏற்பட்டு, அவரது கல்லூரி நாட்களிலிருந்தே அரசியலில் ஈடுபட்டார், 1973 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 இல் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், 1989 இல் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளராகவும் ஆனார்.[2] 2018 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநிலப் பொதுச்செயலாளராக ஆனார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Balakrishnan elected as CPI-M's Tamil Nadu unit secretary".
  2. எஸ். கோபாலகிருஷ்ணன் (ஏப்ரல் 1 2018). "வாழ்க்கையும் போராட்டமும் வேறு வேறல்ல". தி இந்து தமிழ். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பாலகிருஷ்ணன்&oldid=2554195" இருந்து மீள்விக்கப்பட்டது