டி. எம். செல்வகணபதி
டி. எம். செல்வகணபதி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | வி. ராமசாமி |
| பின்னவர் | டி. பி. ஆறுமுகம் |
| தொகுதி | திருச்செங்கோடு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 16 மார்ச்சு 1969 திருச்செங்கோடு |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
டி. எம். செல்வகணபதி (T. M. Selvaganapathy) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், 1991-ஆம் ஆண்டில் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 1991 முதல் 1996 வரையான காலத்தில் ஜெயலலிதா அரசு உள்ளூராட்சி நிர்வாக அமைச்சராகவும் இருந்தவர். முதலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்தவர், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.[2] 30 மே 2000 அன்று வண்ணத் தொலைக்காட்சி ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டது. பின்னர் 4 டிசம்பர் 2001 அன்று உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.[3][4]
சூன் 2010இல், இவர் மாநிலங்களவை உறுப்பினரானார். அதிமுக ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டுக் கூரைகள் அமைப்பதில் ஊழல் செய்ததாகத் 1997இல் தொடரப்பட்ட வழக்கில் டி. எம். செல்வகணபதிக்கு 2014 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.[5][6] இதனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து செல்வகணபதி தகுதி நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டதால், பதவியிலிருந்து விலகினார். ஊழலுக்காக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் தமிழ்நாடு அரசியல்வாதி ஆனார்.[7]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 235-236.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "Selvaganapathy joins DMK". The Hindu. 29 August 2008. http://www.hinduonnet.com/2008/08/29/stories/2008082954330400.htm.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Colour TV scam: High Court upholds acquittal of Jayalalithaa". Press Trust of India (Chennai: The Hindu). 21 August 2009. http://www.thehindu.com/news/national/tamil-nadu/colour-tv-scam-high-court-upholds-acquittal-of-jayalalithaa/article6955.ece. பார்த்த நாள்: 1 January 2014.
- ↑ "Madras HC upholds acquittal of Jayalalitha in TV scam". Zee News. 22 August 2009. http://zeenews.india.com/home/madras-hc-upholds-acquittal-of-jayalalitha-in-tv-scam_557310.html. பார்த்த நாள்: 1 January 2014.
- ↑ டி.எம்.செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் சிறை: சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு
- ↑ சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறை!
- ↑ "First Tamil Nadu politician to be disqualified as MP after conviction". NDTV. 2014-04-17. http://www.ndtv.com/elections/article/election-2014/first-tamil-nadu-politician-to-be-disqualified-as-mp-after-conviction-509972?pfrom=home-lateststories.