உள்ளடக்கத்துக்குச் செல்

துரை வைகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரை வைகோ
முதன்மைச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2024
முன்னையவர்சு. திருநாவுக்கரசர்
தொகுதிதிருச்சிராப்பள்ளி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கோபால்சாமி துரை வையாபுரி

2 ஏப்ரல் 1972 (1972-04-02) (அகவை 52)
அரசியல் கட்சிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்கீதா
பிள்ளைகள்2
பெற்றோர்வைகோ, ரேணுகாதேவி
கல்விமுதுகலை வணிக மேலாண்மை
வேலைசமூகச் செயற்பாட்டளர், அரசியல்வாதி

துரை வைகோ (Durai Vaiko) அல்லது கோபால்சாமி துரை வையாபுரி (பிறப்பு: 2 ஏப்பிரல் 1972) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) நிறுவனர் வைகோவின் மகன் ஆவார்.[1] இவர் மதிமுக-வின் முதன்மைச் செயலாளராகவும், கட்சியின் பரப்புரையாளராகவும், கட்சியின் இணையப் பிரிவை வழிநடத்துபவராகவும் உள்ளார்.[2][3] [4]

இளமைக் காலம்[தொகு]

இவர் 1972 ஆம் ஆண்டு வைகோ மற்றும் ரேணுகாதேவி ஆகிய தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். சென்னை சின்மயா வித்யாலயா பள்ளி மற்றும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார்[5]

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் மதிமுக கட்சியின் முக்கியத் தேர்தல் பரப்புரையாளர்களுள் ஒருவராக இருந்தார்.[6] மதிமுக கட்சியின் இணையத்தளப் பிரிவிலும் இயங்கி வருபவர்.[7][8] 2014 இந்தியப் பொதுத் தேர்தலின் போது பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாகவும்[9] தே.மு.தி.க. கட்சிக்கு ஆதரவாகவும்[10] தேர்தல் பரப்புரையில் இறங்கியவர். இவர் 2014இல் பட்டாசு தொடர்பாக இந்திய மத்திய அரசு விடுத்த புதிய சட்டத்தை எதிர்த்து, சிவகாசியில் உந்துருளி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.[11] இவர் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் மதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை ஆற்றினார்.[12] 2021 அக்டோபரில் மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராகப் பதவியேற்றார்.[13]

மக்களவைக்குத் தெரிவு[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு % எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வாக்கு %
2024 திருச்சிராப்பள்ளி மதிமுக வெற்றி 51.35 பி. கருப்பையா அதிமுக 21.7

தொழில்[தொகு]

இவர் "இந்திய புகையிலை குழுமம்" என்னும் நிறுவனத்தில் பங்குத்தொகை வைத்திருக்கிறார்.[14] இந்த பங்குத்தொகை விவகாரம் மதிமுகவின் எதிர்த்தரப்புக் கட்சிக்காரர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது.[15][16] மேலும் இவர் வீ இரியாலிட்டி (V Realty) தனியார் வரையறுக்கப்பட்டது என்ற நிறுவனத்துக்கு இயக்குநராகவும் உள்ளார்.[17]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Vaiko Resume". Archived from the original on 13 June 2015. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015.
 2. "List of Campaigners" (PDF). Elections.tn.gov. Election commission of India. Archived from the original (PDF) on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015.
 3. "16th LokSabha- Election Campaign" (PDF). Election commission of India. MDMK.
 4. "V Realty Private Limited". corporatedir.com. http://corporatedir.com/company/v-realty-private-limited. 
 5. "தந்தையர் தினம்: "தோல்வினு தெரிஞ்சா பிரியாணி சமைச்சு விருந்து கொடுப்பார் அப்பா!" - துரை வைகோ பேட்டி". விகடன். https://www.vikatan.com/news/politics/politician-durai-vaiko-interview. பார்த்த நாள்: 26 November 2022. 
 6. http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-s-son-political-limelight-door-door-canvass-lse-198728.html
 7. "List of Star Campaingers" (PDF). Elections.tn.gov. Election commission of India. Archived from the original (PDF) on 23 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015.
 8. "l6th LokSabha- Election Campaign" (PDF). Election commission of India. MDMK.
 9. http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-wave-viruthunagar-constituency-says-vaiko-son-durai-vaiyapuri-lse-198614.html
 10. வைகோ மகன் துரை வையாபுரி பேச்சு
 11. "வைகோ மகன் துரை வையாபுரி பேச்சு; பதவியில் இல்லாத போதும் மக்களுக்காகவே உழைப்பு". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2015.
 12. http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-son-campaign-at-kovilpatti-252837.html
 13. "கட்சிப் பொறுப்பேற்ற துரை வைகோ: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து". நியூஸ்7. பார்க்கப்பட்ட நாள் 26 November 2022.
 14. My Son is a Distributor for Tobacco Products - Smoking Is Not Harm As Alcohol - Vaiko Getting Angry
 15. ஆமாம்..என் மகன் புகையிலை கம்பெனி நடத்துவது உண்மை தான்... அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு வைகோ பதில்
 16. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Skeletons-in-Prohibition-Megaphones-closet/2015/08/04/article2956613.ece
 17. https://www.zaubacorp.com/director/GOPALSAMY-DURAI-VAIYAPURI/01723028
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை_வைகோ&oldid=4040818" இலிருந்து மீள்விக்கப்பட்டது