அருண் நேரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருண் நேரு
பிறப்புஏப்ரல் 24, 1944(1944-04-24)
இலக்னோ, பிரித்தானிய இந்தியா
இறப்பு25 சூலை 2013(2013-07-25) (அகவை 69)
குர்கான், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி, பத்தியாளர்
வாழ்க்கைத்
துணை
சுபத்ரா நேரு[1]
பிள்ளைகள்2

அருண் நேரு (Arun Nehru, 24 ஏப்பிரல் 1944–25 சூலை 2013) இந்திய அரசியல் வாதி ஆவார். நடுவணரசு அமைச்சராக இருந்தவர்.[2] 1984 ஆம் ஆண்டில் இராசீவ் காந்தி இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தபோது அவருடைய நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் அருண் நேரு கருதப்பட்டார். நேரு குடும்பத்தாருக்கு இவர் உறவினர் ஆவார்.

வரலாறு[தொகு]

அரசியலில் நுழைவதற்கு முன்பாக ஜென்சன் அண்டு நிக்கல்சன் என்னும் குழுமத்தின் தலைவராக 17 ஆண்டுகள் இருந்தார்.[3] 1984 இல் இந்திரா காந்தி விருப்பத்திற்கிணங்க காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தார்[1][4]. ஏழாவது மக்களவையிலும் எட்டாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.

1984 -86 இல் காங்கிரசு நடுவணரசிலும் 1989-90 இல் சனதாதள அரசிலும் அமைச்சராகவும் இருந்தார். 1987 இல் இராசீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காங்கிரசிலிருந்து பிரிந்து வி. பி. சிங் தலைமையில் இருந்த முன்னணியான ஜன மோர்ச்சாவில் அருண் நேரு சேர்ந்தார். 1989 இல் சனதா தளம் அரசு அமையப் பெரும் பங்காற்றினார். 1990 வரை நடுவணரசு அமைச்சராக இருந்தார்.

1999 இல் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். செக்கோசிலோவாக்கியா குழுமத்திலிருந்து துப்பாக்கிகள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக அருண் நேரு மீது குற்றம் சாற்றப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது [5][6][7][8].

பிற்காலத்தில் ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். வரலாறு, இலக்கியம், வேளாண்மை போன்ற துறைகளில் நாட்டம் கொண்டவராக இருந்தார்.

சான்றாவணம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_நேரு&oldid=2710999" இருந்து மீள்விக்கப்பட்டது