எடப்பாடி கே. பழனிச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எடப்பாடி கே. பழனிச்சாமி ஓர் தமிழக அரசியல்வாதி. இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.திமு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[1]. 1991 இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[2]. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் 1998 இல் வெற்றிபெற்றார்[3]. 2011 ஆண்டு எடப்பாடி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,[4] தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார்.[5] மீண்டும் 2016 ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.

இவர் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிறுவம்பாளையத்தின் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர், தவுசாயம்மாள் ஆவர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]