உள்ளடக்கத்துக்குச் செல்

கபில் சிபல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபில் சிபல்
Portrait of Kapil Sibal
2007ஆம் ஆண்டு உலக பொருளாதார மன்றத்தில் கபில் சிபல்
நடுவண் மனிதவள மேம்பாடு அமைச்சர்
பதவியில்
22 மே 2009 – 2014
முன்னையவர்அர்ஜுன் சிங்
பின்னவர்ஸ்மிருதி இரானி
நடுவண் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 நவம்பர் 2010
முன்னையவர்ஆ. ராசா
நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
பதவியில்
22 மே 2004 – 2010
பின்னவர்பவன் குமார் பன்சல்
நடுவண் புவியறிவியல் அமைச்சர்
பதவியில்
22 மே 2004 – 2010
பின்னவர்பவன் குமார் பன்சல்
சாந்தினிசௌக் மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 ஆகத்து 1948 (1948-08-08) (அகவை 75)
ஜலந்தர், பஞ்சாப்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்(மறைந்த) நீனா சிபல் (தி. 1973)
பிள்ளைகள்2 மகன்கள்
வாழிடம்புது தில்லி
முன்னாள் கல்லூரிதில்லிப் பல்கலைக்கழகம் (முதுகலை (கலை) பட்டம் மற்றும் சட்ட பட்டப்படிப்பு)
ஆர்வர்ட் சட்டப் பள்ளி (சட்ட மேற்படிப்பு)
தொழில்வழக்கறிஞர்
இணையத்தளம்கபில் சிபல்
As of 9 சூலை, 2008

கபில் சிபல் (Kapil Sibal, பஞ்சாபி : ਕਪਿਲ ਸਿਬਲ, இந்தி: कपिल सिब्बल; பிறப்பு 8 ஆகத்து 1948) ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கபில் 2009ஆம் ஆண்டு தில்லியின் சாந்தினிசௌக் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடுவண் அரசில் கடந்த 2009-2014 மன்மோகன் சிங் அரசில், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும்[1] மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தார். இதற்கு முந்தைய ஆய அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் புவியறிவியல் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டு தில்லியின் சாந்தினிசௌக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ.காவின் ஹர்ஷவர்தனிடம் தோற்றார்[2].

சூலை 1988ஆம் ஆண்டு பீகாரிலிருந்து மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். திசம்பர் 1989 முதல் திசம்பர் 1990 வரை கூடுதல் சொலிசிடைர் ஜெனரலாக பொறுப்பேற்றார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவராக மூன்று முறை (1995–96, 1997–98 மற்றும் 2001–2002) இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Council of Ministers – Who's Who – Government: National Portal of India". http://india.gov.in. Government of India. பார்க்கப்பட்ட நாள் 11 August 2010. {{cite web}}: External link in |work= (help)
  2. "top-30-losers-in-lok-sabha-polls".

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கபில் சிபல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபில்_சிபல்&oldid=3962389" இலிருந்து மீள்விக்கப்பட்டது