அர்ஜுன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருச்சுன் சிங்
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
பதவியில்
2004–2009
முன்னவர் முரளி மனோகர் ஜோசி
பின்வந்தவர் கபில் சிபல்
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
தனிநபர் தகவல்
பிறப்பு சுர்ஹத்,சிதி , மத்தியப் பிரதேசம், இந்தியா
இறப்பு 4 மார்ச்சு 2011(2011-03-04) (அகவை 80)
வாழ்க்கை துணைவர்(கள்) சரோஜ் குமாரி
பணி அரசியல்வாதி, முன்னாள் நடுவண் அமைச்சர்

அர்ஜுன் சிங் (இந்தி: अर्जुन सिंह நவம்பர் 5, 1930 - மார்ச்சு 4, 2011[1]) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்த ஒரு அரசியல்வாதி. இவர் 2004 முதல் 2009 ஆம் ஆண்டுவரை, மன்மோகன் சிங் அமைச்சரவையில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். மாரடைப்பு காரணமாக மார்ச் 4, 2011 அன்று இறந்தார். இவர் மத்தியப் பிரதேசத்தின், முன்னாள் மதிப்புமிக்க ரெவா அரசவைக்குரிய சுர்ஹட் ஜாகிரைச் சேர்ந்தவர்.[2] இவர் சத்திரிய (போர்வீரர்) இனத்தைச் சார்ந்த ஒரு ராஜ்புத். பலவீனமடைந்து வரும் அவருடைய உடல்நலன் காரணமாக இவர் தற்போதைய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறாவிட்டாலும் விரைவிலேயே ஆளுநராக நியமனம் செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.[3] இவருடைய தந்தை, ராவ் சிவ் பகதூர் சிங், இவரும் ஒரு அரசியல்வாதி, ஒரு வைர சுரங்க நிறுவனத்துக்குப் போலியான பத்திரத்தை வழங்குவதற்காக கையூட்டு பெற்றதாக 1950 ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்டவர்.

இவர் தன்னுடைய கல்வியை அலகாபாத் மற்றும் ஆக்ரா பல்கலைக்கழகங்களில் பெற்றார் (பி.ஏ., எல்எல்.பி.).

அர்ஜுன் சிங், மத்திய பிரதேசத்தின் சாட்னாவிலுள்ள அமர்பதான் அருகிலுள்ள பிரதாப்கரைச் சார்ந்த சரோஜ் தேவியைத் திருமணம் செய்துள்ளார், அந்தத் தம்பதியினருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் அர்ஜுன் சிங் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார், ஆனால் பாப்ரி மசூதி இடிக்கப்பட்டவுடன் இவர் பதவி விலகினார். அந்த நேரத்தில் இவர் உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் (முன்பு உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது) முன்னாள் முதல்வரான திரு. நாராயண் தத் திவாரியைத் தலைவராகக் கொண்டு, அனைத்து இந்திய இந்திரா காங்கிரசை (திவாரி) உருவாக்கினார், ஆனால் 1996 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் அவர்கள் தோற்றனர், காங்கிரசும் மத்தியில் தனது ஆட்சியை இழந்தது. பின்னர் அவர் மீண்டும் காங்கிரசுக்குத் திரும்பி மறுபடியும் தோற்றார், அவர் மூன்று முறை மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறார் மற்றும் ஒரு முறை குறைந்த காலத்திற்கு பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக இருந்திருக்கிறார். பஞ்சாபின் ஆளுநராக, அவர் அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக, ராஜீவ்-லோங்கோவால் ஒப்பந்தத்திற்காகப் பணிபுரிந்தார். அவர் 2000 ஆம் ஆண்டிற்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதினைப் பெற்றார்.

வகித்த பதவிகள்[தொகு]

 • 1957-85 மத்திய பிரதேச சட்டசபை உறுப்பினர்
 • செப். 1963- டிச. 1967 விவசாயம், பொது நிர்வாகத் துறை (GAD) மற்றும் தகவல் & பொதுமக்கள் தொடர்பு அமைச்சர், மத்தியப் பிரதேசம்
 • 1967 திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சர், மத்தியப் பிரதேசம்
 • 1972-77 கல்வி அமைச்சர், மத்தியப் பிரதேசம்
 • 1977-80 எதிர்கட்சித் தலைவர், மத்தியப் பிரதேச சட்டசபை
 • 1980-85 முதல் அமைச்சர், மத்தியப் பிரதேசம்
 • மார்ச் - நவ. 1985 பஞ்சாபின் ஆளுநர்
 • பிப். 1988 - ஜன. 1989 முதல் அமைச்சர், மத்தியப் பிரதேசம்
 • ஜூன் 1991 - டிச. 1994 மனிதவள மேம்பாட்டு அமைச்சர், இந்திய அரசு
 • ஜூன் 1991 - மே 1996 சாத்னாவின் பத்தாவது மக்களவை உறுப்பினர்
 • ஜூன் 1996 - பதினோறாவது மக்களவைக்கு சாத்னாவிலிருந்து தோற்றார்
 • ஏப்ரல் 1998 - பன்னிரண்டாவது மக்களவைக்கு ஹோஷங்காபாத்திலிருந்து தோற்றார்
 • ஏப்ரல் 2000 - இராஜ்ய சபாவுக்குத் தேர்வு செய்யப்பட்டார்
 • மே 15, 2000 - பிப். 2004 உள்துறை அமைச்சரவைக்கான ஆலோசனைக் குழு உறுப்பினர்
 • ஆகஸ்ட் 31, 2001- ஜூலை 2004 சட்டவிதிமுறை குழுவின் உறுப்பினர்
 • ஏப்ரல் 2002 - பிப். 2004 தலைவர், பார்லிமென்டரி ஸ்டாண்டிங் கமிட்டி ஆன் பர்பசஸ் கமிட்டி
 • மே 22, 2004 - மே 2009 மனிதவள அமைச்சர்[4]

மார்ச் 20, 2006 அன்று எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர் மீண்டும் இராஜ்ய சபாவுக்கு மத்தியப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

சர்ச்சைகள்[தொகு]

போபால் நச்சுவாயு துன்பம் போபால் பேரழிவு நிகழ்ந்தபோது அர்ஜுன் சிங்தான் மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். டிசம்பர் 2, 1984 மற்றும் டிசம்பர் 3, 1984 இடைப்பட்ட அந்த ஊழ்வினையான இரவில், வாயு கசிவு ஏற்பட்டபோது அர்ஜுன் சிங் அந்த கசிந்த வாயுவின் பயங்கரத் தாக்குதல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய கெர்வா டாம் அரண்மனைக்கு (போபாலுக்கு வெளியே) தப்பிச்சென்றுவிட்டதாகவும், அந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கவும் அல்லது நிர்வாகத்தை முன்னெடுக்கவும் அவர் அங்கு இல்லையென்று பரவலான குற்றச்சாட்டு இருக்கிறது.

1980 ஆம் ஆண்டுகளில் அர்ஜுன் சிங் மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, சிலரால் சுர்ஹாத் லாட்டரி வழக்கு என்றழைக்கப்பட்ட ஒரு பழித்தூற்றலுக்கு ஆளானார், இதில் அவர் ஒரு போலியான மாநில லாட்டரியை அமைக்க உதவி புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார், இக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.[6]

2006 ஆம் ஆண்டு மும்பை இரயில் வெடிவிபத்துக்குப் பிறகு, அவர் அமைச்சரவை கூட்டத்தில், இந்து மறுமலர்ச்சிக்குரிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் நாக்பூரிலுள்ள அதன் தலைமையிடத்தின் மீதான ஒரு முந்தைய தாக்குதல் முயற்சி, சங்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சதி முயற்சிதான் என்று மகாராஷ்டிர உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி ஒருவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை எடுத்துக்கூறினார். இதைத் தொடர்ந்து அவர், இந்தியாவின் பழங்குடிமக்களின் நலனுக்காக விஷ்வ இந்து பரிஷத்[7] தால் நடத்தப்படும் ஓர்-ஆசிரியர் பள்ளிகள், ஏகால் வித்யாலயா க்களை மதச்சார்புடையவை என பழித்துக் கூறினார்.[8]

அர்ஜுன் சிங்கிற்கு எதிராக, வரதட்சனைக்கு எதிரான பிரிவின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.[9] இவரது பேரனின் துணைவி பிரியங்கா சிங்கின் தந்தை மாதவேந்திரா சிங் இக்குற்றாச்சாட்டை சுமத்தியுள்ளார். மாயாவதி அரசாங்கம், அந்த வரதட்சனைக் கொடுமை வழக்கின் மீது சிபிஐ விசாரணை கோருவதென முடிவுசெய்திருக்கிறது.[10]

அர்ஜுன் சிங், மனித வள மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது, அடிப்படை கட்டமைப்புகளை கொண்டிராத தனியார் இலாபகர கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதியை வழங்கியதில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருப்பதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. ஜனவரி 2010 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம், அத்தகைய 44 கல்வி நிறுவனங்களின் "நிகர்நிலைப் பல்கலைக்கழக" தகுதியை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.[11]

இடஒதுக்கீடு சர்ச்சைகள்[தொகு]

2005 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 104வது திருத்த மசோதாவை வரைந்ததன் மூலம் கூடுதல் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டது, அது இறுதியில் 93வது திருத்த மசோதாவாக மாறியது. இந்தத் திருத்த மசோதா கூற்றுப்படி, இது இன்னமும் உச்சநீதி மன்றத்தாலான அரசியலமைப்புக்குரிய 'அடிப்படைக் கட்டமைப்பு' பரிசோதனையைக் கடந்திருக்கவில்லை, எல்லா தனியார் உதவிபெறாத கல்வி நிறுவனங்களும் தங்கள் மாநில அரசுகளால், குறிப்பிட்ட இதர பின்தங்கிய வகுப்பினர்களுக்காக இட ஒதுக்கீடுகள் கோரப்படலாம். 2006 ஆம் ஆண்டின் ஆரம்பங்களில், பன்னாட்டளவில் புகழ்பெற்ற இண்டியன் இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் டெக்னாலஜி மற்றும் இண்டியன் இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் மேனேஜ்மெண்ட், அத்துடன் இந்திய மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் இதர உயர் கல்விகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு (ஓபிசி) சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டுப் பங்கீடுகளை 22.5% திலிருந்து 49.5% மாக அதிகரிக்கவும் கோரியிருந்தார், இந்த நடவடிக்கை, பத்திரிக்கை மற்றும் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களிடம் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

அர்ஜுன் சிங், 32 மத்திய நிறுவனங்களில் மட்டுமல்லாமல் 100 க்கும் மேலான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் ஒதுக்கீடுகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார். இது கல்வித் தரத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலித் முஸ்லிம் ஒதுக்கீடுகள் என்ற பொருளில் அவர் குறிப்பிடும்போது, "ஐக்கிய முற்போக்கு கூட்டணி முஸ்லிம்களின் நலனுக்காக முழுக்கவும் பொறுப்பேற்றிருக்கிறது" என்றார். அவர் பின்னர், இந்த ஒதுக்கீடுகள் தன்னுடைய காங்கிரஸ் கட்சிக்கான ஒரு வாக்குவங்கிக் கருவி என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.[12]

மேலும் பார்க்க[தொகு]

 • இந்தியாவின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள், 2006
 • இந்தியாவில் இடஒதுக்கீடு
 • முன்னேற்றமடைந்த வகுப்பினர்

மேற்கோள்கள்[தொகு]

 1. சிஃபி செய்தி தளம்
 2. "சுர்ஹாத்". 2005-11-09 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2005-11-09 அன்று பார்க்கப்பட்டது.
 3. அர்ஜுன் சிங் ஆளுநராக நியமிக்கப்படக்கூடும்[தொடர்பிழந்த இணைப்பு]
 4. இந்திய நாடாளுமன்ற வலைதளத்தில் சிவி பரணிடப்பட்டது 2008-02-28 at the வந்தவழி இயந்திரம்.
 5. "அர்ஜுன், பரத்வாஜ், ஷிண்டே எதிர்ப்பில்லாமல் இந்திய மேலவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்", ட்ரைபூன்இண்டியா.காம், மார்ச் 20, 2006.
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2006-06-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-03-11 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2006-06-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-03-11 அன்று பார்க்கப்பட்டது.
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2006-11-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-10 அன்று பார்க்கப்பட்டது.
 9. [1][தொடர்பிழந்த இணைப்பு]
 10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-10 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |https://web.archive.org/web/20081204091938/http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id= ignored (உதவி); Unknown parameter |= ignored (உதவி)
 11. http://timesofindia.indiatimes.com/india/44-deemed-universities-to-be-de-recognised-by-govt/articleshow/5474574.cms
 12. தலித் முசுலிம் ஒதுக்கீட்டுக்காக காங்கிரசு முயற்சி[தொடர்பிழந்த இணைப்பு] பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இண்டியா - மார்ச் 15, 2007

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்_சிங்&oldid=3592766" இருந்து மீள்விக்கப்பட்டது