மத்திய மாகாணம் மற்றும் பேரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய மாகாணம் மற்றும் பேரர்

 

1903–1950
 

 

கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of மத்திய மாகாணம் மற்றும் பேரர்
1909-இல் பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாணம் மற்றும் பேரர் மாகாணங்களின் மாவட்டங்கள், கோட்டங்கள், சுதேச சமஸ்தானங்கள் மற்றும் கிழக்கு எல்லைகளைக் காட்டும் வரைபடம்
தலைநகரம் நாக்பூர்
வரலாற்றுக் காலம் குடிமைப்பட்ட கால இந்தியா & விடுதலை இந்தியா
 •  மத்திய மாகாணம் மற்றும் பேரர் மாகாணங்களை இணைத்தல் 1903
 •  மத்திய பாரதம் & விந்தியப் பிரதேசம் நிறுவுதல் 1950
Population
 •  1941 16,813,584 

மத்திய மாகாணம் மற்றும் பேரர் (Central Provinces and Berar), மத்திய இந்தியாவின் தக்காண பீடபூமியில் இருந்த பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரமாக நாக்பூர் நகரம் இருந்தது. இம்மாகாணம், பிரித்தானிய இந்தியாவில் இருந்த மத்திய மாகாணம் மற்றும் பேரர் மாகாணங்களை இணைத்ததன் மூலம் 1903-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியத் தலைமை ஆளுநர் கர்சன் பிரபுவால் புதிதாக நிறுவப்பட்டது.[1]1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாகாணத்தின் மக்கள் தொகை 1,68,13,584 ஆக இருந்தது.

நாக்பூர் மாகாணம் மற்றும் சௌகோர் மற்றும் நெர்புத்தா பகுதிகளைக் கொண்டு 1861-ஆம் ஆண்டில் மத்திய மாகாணம் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களால் ஐதராபாத் நிஜாமிடமிருந்து 5 நவம்பர் 1902 அன்று குத்தகைக்கு எடுக்கப்பட்ட பேரர் பகுதிகள் மற்றும் மத்திய மாகாணத்தை இணைத்து 1903-ஆம் ஆண்டில் மத்திய மாகாணம் மற்றும் பேரர் புதிதாக நிறுவப்பட்டது.[2]

1947-ஆம் ஆண்டில் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1950-ஆம் ஆண்டில் இம்மாகாணத்தின் பகுதிகள் மற்றும் மத்திய இந்திய முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தானங்களை, மும்பை மாகாணம், மத்திய பாரதம் மற்றும் விந்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கும் போது மத்திய பாரதம் மற்றும் விந்தியப் பிரதேசம் ஆகியவைகள் மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gazetteers of the Bombay Presidency-Buldhana district-History-British Period". Buldhana District Gazetteer website. 6 October 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 March 2009 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Provinces". 28 September 2014 அன்று பார்க்கப்பட்டது.


ஆள்கூறுகள்: 21°09′N 79°05′E / 21.15°N 79.09°E / 21.15; 79.09