உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானிய இந்தியாவின் முகமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரித்தானிய இந்தியாவின் முகமைகள், பிரித்தானிய இந்தியாவின் நேரடி ஆட்சியில் இல்லாத, ஆனால் ஆட்சிக்கு கட்டுப்பட்ட சுதேச சமஸ்தான மன்னர்களிடமிருந்து ஆண்டுதோறும் கப்பம் வசூலிக்கவும், சமஸ்தானங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மேற்பார்வை செய்யவும், சமஸ்தானங்களின் அரசியல் நிலவரம் குறித்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிக்கை அனுப்பவும், பிரித்தானிய இந்திய அதிகாரிகள் தலைமையில் முகமைகள் நிறுவப்பட்டது. இம்முகமைகள் மாகாண ஆளுநர்களின் தலைமையின் கீழ் செயல்படும். இந்த முகமைகளின் மேற்பார்வையில் சுதேச சமஸ்தானங்கள் செயல்பட்டது. முகமைகள் விவரம்:

 1. பஞ்சாப் முகமை
 2. இராஜபுதனம் முகமை
 3. கத்தியவார் முகமை
 4. பரோடா மற்றும் குஜராத் முகமை
 5. ரேவா கந்தா முகமை
 6. மகி கந்தா முகமை
 7. சூரத் முகமை
 8. தக்காண முகமை
 9. மத்திய இந்திய முகமை
 10. மால்வா முகமை
 11. போபவார் முகமை (மால்வா முகமையுடன் இணைக்கப்பட்டது)
 12. போபால் முகமை
 13. இந்தூர் முகமை
 14. புந்தேல்கண்ட் முகமை
 15. பகேல்கண்ட் முகமை
 16. கிழக்கிந்திய முகமை

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]