முதலாம் மிண்டோ பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முதலாம் மிண்டோ பிரபு
இந்தியத் தலைமை ஆளுநர்
Gilbert Eliot, 1st Earl of Minto by James Atkinson.jpg
மிண்டோ பிரபு
இந்தியத் தலைமை ஆளுநர், வில்லியம் கோட்டை
பதவியில்
31 சூலை 1807 – 4 அக்டோபர் 1813
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் ஜார்ஜ்
முன்னவர் சர் ஜார்ஜ் பார்லோ
தற்காலிக தலைமை ஆளுநர்
பின்வந்தவர் மொய்ரா பிரபு
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 23, 1751(1751-04-23)
எடின்பர்க்
இறப்பு 21 சூன் 1814(1814-06-21) (அகவை 63)
ஸ்டீவனேஜ், ஹெர்ட்போர்டுசயர்
தேசியம் ஸ்காட்லாந்து
வாழ்க்கை துணைவர்(கள்) அன்னா மரியா (d. 1829)
படித்த கல்வி நிறுவனங்கள் எடின்பர்க் பல்கலைக்கழகம்
கிறிஸ்ட் சர்ச், ஆக்ஸ்போர்டு

முதலாம் மிண்டோ பிரபு, கில்பர்ட்-எலியட்-முறே-கினின்மௌன்டு (Gilbert Elliot-Murray-Kynynmound, 1st Earl of Minto, 23 ஏப்ரல் 1751 – 21 சூன் 1814) ஐக்கிய இராச்சியத்தின் ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்தவரான இவர் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜதந்திரியும் ஆவார். இவர் பிரிவி கௌன்சில் உறுப்பினராகவும், பின்னர் பிரித்தானிய இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராக 31 சூலை 1807 முதல் 4 அக்டோபர் 1813 முடிய பணியாற்றியவர். [1]

மிண்டோ-மார்லே சீர்திருத்தங்கள்[தொகு]

காலனிய மாகாண நிருவாகத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இந்தியர்களின் பங்களிப்பை அதிகரிக்க மிண்டோ பிரபுவும், ஜான் மார்லேவும் இணைந்து சில பரிந்துரைகளை ஐக்கிய இராச்சியத்தின் மன்னருக்கு அனுப்பி வைத்தனர்.[2] இச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த பிரித்தானியப் பேரரசு 1909ஆம் ஆண்டில் இந்திய அரசுச் சட்டம், 1909 இயற்றியது. இதன் சிறப்புகள்:

  • இந்திய மாகாண சட்டமன்றங்களுக்குத் இந்திய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னர் இந்திய உறுப்பினர்கள் மாகாண ஆளுநர்களால் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்தனர். மேலும் சட்டமன்றங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் விரிவுபடுத்தப்பட்டு இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
  • சட்டமன்றங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் முசுலிம்களுக்கு தனி இடங்கள் (25%) ஒதுக்கப்பட்டன. முசுலிம் உறுப்பினர்களை முசுலிம்களே தேர்ந்தெடுக்க தனித்தொகுதிகளும் உருவாக்கப்பட்டன.
  • தலைமை ஆளுனர் மற்றும் மாநில ஆளுனர்களின் நிருவாகக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டு அதில் சில இந்தியர்களுக்கும் இடமளிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_மிண்டோ_பிரபு&oldid=2895687" இருந்து மீள்விக்கப்பட்டது