யூனியன் கார்பைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூனியன் கார்பைடு நிறுவனம்
வகைதுணை நிறுவனம்
நிறுவுகை1917
தலைமையகம்ஹியூஸ்டன், அமெரிக்கா
முதன்மை நபர்கள்பாட்றிக் ஈ. கோட்சுசாக், மு.செ.அ & தலைவர்
தொழில்துறைவேதித் தொழிற்துறை
உற்பத்திகள்திரள் வேதிகள்
எத்திலீன்
எத்திலீன் கிளைத்தவை
வருமானம்US$7.33 பில்லியன் (2009)
தாய் நிறுவனம்டொவ் கெமிக்கல் கம்பனி
இணையத்தளம்Unioncarbide.com
யூனியன் கார்பைடின் எரிவளி விளக்குகளுக்கான 1922 விளம்பரம். மின் விளக்குகள் ஐக்கிய அமெரிக்காவின் பல ஊரகப் பகுதிபகளில் பரவவில்லை.[1]

யூனியன் கார்பைடு நிறுவனம் (Union Carbide Corporation) (2001 இலிருந்து) டொவ் கெமிக்கல் கம்பனிக்கு முழுமையும் உரிமையான துணை நிறுவனமாகும். இது தற்போது 2,400க்கும் கூடுதலான பணியாளர்களைக் கொண்டுள்ளது.[2] யூனியன் கார்பைடு வேதிப் பொருட்களையும் பல்லுறுப்பிகளையும் தயாரிக்கின்றது; இவை மற்ற தொழிற் முனைவோரால் மேலும் மாற்றப்பட்டு நுகர்வோரை அடைகின்றன. சில தயாரிப்புப் பொருள்கள் கூடிய அளவில் தயாரிக்கப்படுகின்றன; வேறு சில சிறு சந்தைகளின் தேவைகளை சந்திக்கும் குறிப்பிட்ட பொருள்களாகும். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பொருட்கள் வண்ணப்பூச்சு தயாரிப்பு, பொதியாக்கல், கம்பி,வடத் தொழில், வீட்டு நுகர்வுப் பொருட்கள், தனிநபர் பேணல், மருந்துகள், தானுந்துகள், துணித் தயாரிப்பு, வேளாண்மை, எண்ணெய் மற்றும் வளித் துறைகளில் பயனாகின்றன. இந்நிறுவனம டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டின் அங்கமாக இருந்தது.[3]

1917இல் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இயற்கை எரிவளி நீர்மங்களான எத்தேன், புரொப்பேன் போன்றவற்றிலிருந்து விலை குறைந்த முறையில் எத்திலீன் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தனர். இதுவே தற்கால, பெட்ரோலிய வேதிகள் தொழிலுக்கு முன்னோட்டமாக அமைந்தது. விற்பதற்கு முன்னதாக இந்த நிறுவனத்தின் அங்கமாக எவரெடி மின்கல நிறுவனமும் கிளாடு பைகள் நிறுவனமும் இருந்தன; சிமோனிசு தானுந்து மெழுகு, பிரெசுடோன் உறைதல் தடுப்பி போன்ற பொருட்களையும் தயாரித்து வந்தது. பெப்ரவரி 6, 2001இல் டொவ் கெமிக்கல் கம்பனியால் கையகப்படுத்துவதற்கு முன்னதாக இவற்றையும் மின்னியல் வேதிப் பொருட்கள், பாலியூரிதின் இடைப்பொருட்கள், தொழிலக வளிகள், கரிமப் பொருட்கள் தயாரிப்பையும் விற்று விட்டது.[4]

மேலும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. இராபர்ட் டி. பீல் (1940). "ஊரக மின்மயமாக்கல்" (பிடிஎப்). வேளாண்மைக்கான ஐக்கிய அமெரிக்க ஆண்டுநூல். ஐக்கிய அமெரிக்க வேளாண் துறை. pp. 790–809. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08. சனவரி 1925இல் நாட்டிலிருந்த 6.3 மில்லியனுக்கும் கூடுதலாக இருந்த பண்ணைகளில் 204,780, அல்லது 3.2 விழுக்காடு, மட்டுமே மத்திய நிலையத்திலிருந்து மின்சாரச் சேவைகளைப் பெற்றன.
  2. Union Carbide Corporation, About Us. பரணிடப்பட்டது 2014-03-23 at the வந்தவழி இயந்திரம் Accessed May 31, 2011.
  3. "History of DJIA, globalfinancialdata.com". Archived from the original on 2006-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
  4. Union Carbide Corporation, History பரணிடப்பட்டது 2008-07-18 at the வந்தவழி இயந்திரம், Accessed July 9, 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

  • போப்பால் கதை - 1984 போபால் பேரழிவின் முழுமையான தொகுப்பு
  • UnionCarbide.com - யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முகப்புப் பக்கம்
  • Bhopal.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூனியன்_கார்பைட்&oldid=3791587" இலிருந்து மீள்விக்கப்பட்டது