டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1896 முதல் மார்ச் 2024 வரை டௌ ஜோன்ஸ் குறியீட்டின் வரைபடம்

டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு (Dow Jones Industrial Average) 19ஆம் நூற்றாண்டில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழின் பதிப்பாசிரியர் சார்ல்ஸ் டௌ படைத்த பங்கு சந்தை குறியீடுகளில் ஒன்றாகும். அமெரிக்கப் பங்கு சந்தையின் தொழில்துறை நிறுவனங்களின் செயல்திறன் அளவு பார்க்க பயன்பாட்டில் உள்ளது. டௌ ஜோன்ஸ் போக்குவரத்து குறியீடுக்கு அடுத்த படியாக இரண்டாம் மிக பழமையான பங்கு சந்தை குறியீடு ஆகும். அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களில் முப்பதை இக்குறியீடு பார்க்கிறது.

பார்க்கப்படும் நிறுவனங்கள்[தொகு]

நிறுவனம் பங்கு வணிக குறி துறை இணைந்த தேதி
3எம் MMM குழுமம் 1976-08-09 1976-08-09 (மின்னசோட்டா மைனிங் அண்ட் மேனிபேக்ட்சரிங் என்ற பெயரில்)
அலோகா AA அலுமினியம் 1959-06-01 1959-06-01 (அலுமினியம் கம்பெ்னி ஆப் அமெரிக்கா என்ற பெயரில்)
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் AXP நுகர்வோர் நிதி 1982-08-30 1982-08-30
ஏடி & டி T தொலைத்தொடர்பு 1999-11-01 1999-11-01 (எசு பி சி கம்யூனிகேசன்சு என்ற பெயரில்)
பாங்க் ஆப் அமெரிக்கா BAC வங்கி 2008-02-19 2008-02-19
போயிங் BA விண்வெளி & பாதுகாப்பு 1987-03-12 1987-03-12
கேட்டர்பிள்ளர் CAT கனரக வாகன உற்பத்தி & சுரங்க கருவி தயாரித்தல் 1991-05-06 1991-05-06
செவ்ரான் கார்ப்பரேசன் CVX எண்ணெய் & எரிவாயு 2008-02-19 2008-02-19
சிஸ்கோ சிஸ்டம்ஸ் CSCO கணினி வலைப்பின்னல் 2009-06-08 2009-06-08
கோகோ கோலா KO குடி பானங்கள் 1987-03-12 1987-03-12
டுபாண்ட் DD வேதியியல் 1935-11-20 1935-11-20 (மேலும் 1924-01-22 to 1925-08-31)
எக்சான்மொபில் XOM எண்ணெய் & எரிவாயு 1928-10-01 1928-10-01 (ஸ்டேண்டர் ஆயில் என்ற பெயரில்)
ஜெனரல் எலக்ட்ரிக் GE குழுமம் 1907-11-07 1907-11-07
ஹெவ்லட்-பேக்கர்ட் HPQ தொழினுட்பம் 1997-03-17 1997-03-17
தி ஹோம் டிபோ HD வீடு சார்ந்த & சில்லறை வணிகம் 1999-11-01 1999-11-01
இண்டல் INTC குறைகடத்திகள் 1999-11-01 1999-11-01
ஐபிஎம் IBM கணினி & தொழினுட்பம் 1979-06-29 1979-06-29
ஜான்சன் & ஜான்சன் JNJ மருந்து 1997-03-17 1997-03-17
ஜேபி மார்கன் சேஸ் JPM வங்கி 1991-05-06 1991-05-06 (ஜே.பி மார்கன் & கம்பெனி என்ற பெயரில்)
கிராப்ட் புட்ஸ் KFT உணவு பதப்படுத்துதல் 2008-09-22 2008-09-22
மெக்டோனால்ட் MCD துரித உணவு 1985-10-30 1985-10-30
மெர்க் MRK மருந்து 1979-06-29 1979-06-29
மைக்ரோசாப்ட் MSFT கணினி மென்பொருள் 1999-11-01 1999-11-01
பைசர் PFE மருந்து 2004-04-08 2004-04-08
புரக்டர் & கேம்பல் PG நுகர்வோர் பொருட்கள் 1932-05-26 1932-05-26
டிராவலர்ஸ் TRV காப்பீடு 2009-06-08 2009-06-08
யுனைட்டட் டெக்னாலிஜிஸ் கார்ப்பரேசன் UTX குழுமம் 1939-03-14 1939-03-14 (யுனைட்டட் ஏர்கிராப்ட் என்ற பெயரில்)
வெரிசான் கம்யூனிகேசன்ஸ் VZ தொலைத்தொடர்பு 2004-04-08 2004-04-08
வால் மார்ட் WMT சில்லரை வணிகம் 1997-03-17 1997-03-17
வால்ட் டிஸ்னி DIS ஒலிபரப்பு & பொழுதுபோக்கு 1991-05-06 1991-05-06