வால்ட் டிஸ்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வால்ட் டிஸ்னி
Walt Disney
Walt disney portrait.jpg
இயற் பெயர் வால்ட்டர் எலியாஸ் டிஸ்னி
பிறப்பு திசம்பர் 5, 1901(1901-12-05)

[2]
சிக்காகோ,  அமெரிக்கா

இறப்பு திசம்பர் 15, 1966(1966-12-15) (அகவை 65)[1]
கலிபோர்னியா,  அமெரிக்கா
தொழில் திரைப்பட இயக்குநர், வால்ட் டிஸ்னி கம்பனியை ஆரம்பித்தவர்.
துணைவர் லில்லியன் பவுண்ட்ஸ் (1925-1966)
பிள்ளைகள் டயான், சரன்
வால்ட் டிஸ்னியின் கையொப்பம்
Newman Laugh-O-Gram (1921)

வால்ட் டிஸ்னி (/ˈdɪzni/;[3] டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கதிர்காக பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் பல வணிக நோக்குடைய பூங்கா வடிவமைப்பு மற்றும் அசைப்படம் எடுப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் மிக்கி மௌஸ் போன்ற கற்பனை கதாப்பாத்திரங்கள். இவர் அய்பத்தி ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் வென்றுள்ளார்,இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகசாதனை[4] . இதனால் இவரே மற்றவரை விட அதிக நியமனங்களும்,விருதுகளும் பெற்றார்.[5] ஏழு எம்மி விருதுகளும் வென்றார். இவர் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள டிஸ்னிலாந்து மற்றும் வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் பொழுதுபோக்கு பூங்காக்கள்,ஜப்பான்,பிரான்ஸ் மற்றும் ஹாங்காங் போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார்.

புளோரிடாவில் தன் கனவு திட்டபணியான வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் திறப்புக்கு சில வருடங்கள் முன்னரே 1966-ஆம் ஆண்டு டிசம்பர் பதினைந்தாம் தேதி டிஸ்னி நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.

ஆரம்ப காலம்[தொகு]

வால்ட் டிஸ்னி 1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி சிக்காகோவில் உள்ள ஹேர்மோசா சமூகப் பிரதேசத்திலுள்ள 2156 N டிரிப் அவெனியூவில் ஈரானியக் கனேடியரான எலியாஸ் டிஸ்னிக்கும், ஜெர்மனிய மற்றும் ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்த புளோரா கோல் டிஸ்னிக்கும் மகனாகப் பிறந்தார்.[6][7]

ஆஸ்கார் விருதுகள்[தொகு]

மிக அதிக முறை ஆஸ்கர் விருதுக்கான நியமனம் மற்றும் ஆஸ்கார் விருது வாங்கிய முறைக்காக வால்ட் டிஸ்னி செய்த சாதனை. இவர் வாங்கிய நான்கு ஆஸ்கார்கள் சிறப்பு விருதுகள் மற்றும் ஒன்று அவர் மறைவுக்கு பின் வழங்கப்பட்டது.

 • 1932: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக : ப்லோவேர்ஸ் அண்ட் ட்ரீஸ் (1932)
 • 1932: மதிப்பியலான விருது: மிக்கி மௌஸ் உருவாக்கியதற்காக.
 • 1934: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: த்ரீ லிட்டில் பிக்ஸ் (1933)
 • 1935: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தி டோர்டிசே அண்ட் தி ஹேர் (1934)
 • 1936: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: த்ரீ ஒர்ப்பன் கிட்டேன்ஸ் (1935)
 • 1937: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தி கன்ட்ரி கசின் (1936)
 • 1938: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தி ஓல்ட் மில் (1937)
 • 1939: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாகr:பெர்டினன்ட் தி புல் (1938)
 • 1939: மதிப்பியலான விருது for ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937)(ஒரு பெண் சிலை மற்றும் ஏழு குட்டி சிலைகள் இவ்விருதாக வழங்கப்பட்டது)[4]
 • 1940: சிறந்த சிறிய கரு,கேலிச்சித்திரத்துகாக: தி அக்லி டக்க்ளிங் (1939)
 • 1941: மதிப்பியலான விருது for: பாண்டசிய (1941), வில்லியம் எ. காரிடி மற்றும் ஜே.என்.ஏ.ஹாகின்சுடன் பங்கிட்டு கொண்டனர் [4]
 • 1942: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: லேந்து எ பா (1941)
 • 1943: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தேர் பூறேர் பேஸ் (1942)
 • 1949: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: சீல் ஐலன்ட் (1948)
 • 1949: இர்விங்.ஜி.தால்பேர்க் நினைவு விருது
 • 1951: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: பீவர் வால்லி (1950)
 • 1952: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: நேச்சர் ஹால்ப் எக்கர் (1951)
 • 1953: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: வாட்டர் பேர்ட்ஸ் (1952)
 • 1954: சிறந்த விளக்கப்படம், திரைப்படத்துக்காக: தி லிவிங் தேசெர்ட் (1953)
 • 1954: சிறந்த விளக்கப்படம், சிறிய கதைக்கருகாக: அலாச்கன் எஸ்கிமோ (1953)
 • 1954: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: டாட் விசில் ப்ளுன்க் மற்றும் பூம்.(1953)
 • 1954: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: பியர் கன்ட்ரி (1953)
 • 1955: சிறந்த விளக்கப்படம், திரைப்படத்துக்காக: வாநிஷிங் ப்ரியரி (1954)
 • 1956: சிறந்த விளக்கப்படம், சிறிய கதைக்கருகாக: மென் அகைன்ச்ட் ஆர்க்டிக்
 • 1959: சிறந்த சிறிய கதைக்கரு, நேரடி நடிக்கும் பாத்திரங்களுக்காக : கிரான்ட் கான்யான்
 • 1969: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: வின்னி தி பூ அண்ட் புல்தேரி டே.
Disney1968.jpg

மேற்கோள்கள்[தொகு]

 1. "Walt Disney". IMDB. பார்த்த நாள் May 21, 2008.
 2. "Walt Disney". IMDB. பார்த்த நாள் 2008-05-21.
 3. http://www.oxforddictionaries.com/definition/english/Disney-Walt?q=disney
 4. 4.0 4.1 4.2 "Walt Disney Academy awards". Academy of Motion Picture Arts and Sciences. பார்த்த நாள் 2008-05-21.
 5. "Results Page – Academy Awards Database". பார்த்த நாள் February 16, 2012.
 6. Lori Rackl (September 27, 2009). "Walt Disney, the man behind the mouse". Chicago Sun-Times. Archived from the original on October 3, 2009. http://web.archive.org/web/20091003001653/http://www.suntimes.com/lifestyles/1790811,disney-walt-museum-san-francisco-092709.article. பார்த்த நாள்: October 21, 2010. 
 7. "Walt Disney biography". Just Disney. மூல முகவரியிலிருந்து June 5, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 21, 2008.

மேலதிக வாசிப்பிற்கு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்ட்_டிஸ்னி&oldid=2232960" இருந்து மீள்விக்கப்பட்டது