உள்ளடக்கத்துக்குச் செல்

மு. செல்வராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. செல்வராசு
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை)
பதவியில்
23 மே 2019 – 13 மே 2024
முன்னையவர்கே. கோபால்
பின்னவர்வை. செல்வராஜ்
தொகுதிநாகப்பட்டினம்
பதவியில்
1996 – 1998-99
முன்னையவர்பத்மா
பின்னவர்ஏ. கே. எஸ். விஜயன்
தொகுதிநாகப்பட்டினம்
பதவியில்
1989–1991
முன்னையவர்எம். மகாலிங்கம்
பின்னவர்பத்மா
தொகுதிநாகப்பட்டினம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 மார்ச்சு 1957
கப்பலுடையான்,
பழைய தஞ்சாவூர் மாவட்டம் ,
மதராசு மாநிலம் (தற்போது திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா
இறப்பு13 மே 2024(2024-05-13) (அகவை 67)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (1975-2024)
துணைவர்கமலவதனம்
உறவுகள்எஸ். ஜி. முருகையன் (மாமனார்)
பிள்ளைகள்2
பெற்றோர்
  • கே. முனியன் (தந்தை)
கல்விதிரு. வி. க. அரசினர் கலைக் கல்லூரி, திருவாரூர்
மூலம்: [1]

மு. செல்வராசு என அறியப்படும் முனியன் செல்வராசு (16 மார்ச்சு 1957- 13 மே 2024) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் ஆவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (இபொக) சார்பில் இந்திய நாடாளுமன்ற மக்களவையில் நாகப்பட்டினம் தொகுதி உறுப்பினராக 1989-91, 1996-99, 2019-24 காலகட்டங்களில் பணியாற்றினார்.

தொடக்க வாழ்க்கை

[தொகு]

இன்றைய திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் எனும் சிற்றூரில் வாழ்ந்த குஞ்சம்மாள் -முனியன் இணையரின் மகனாக 16 மார்ச் 1957 அன்று பிறந்தார் செல்வராசு. உழவர் இயக்கத்தில் பெற்றோர் செயல்பட்டு வந்த நிலையில், அவரும் சிறுவயதிலேயே பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்.[1]

திருவாரூரில் உள்ள திரு. வி. க. அரசினர் கலைக் கல்லூரியில், இளங்கலைப் பட்டம் பெற்றார்.

குடும்ப வாழ்க்கை

[தொகு]

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (இபொக) சார்பில் முன்னதாக 1977-79 வரை நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றிப் படுகொலையான எஸ். ஜி. முருகையனின் மூத்த மகள் கமலவதனத்தை வாழ்விணையராக ஏற்றார் செல்வராசு. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இக் குடும்பம், திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி எனும் ஊரில் வாழ்ந்துவந்தது.

அரசியல்

[தொகு]

கட்சிப் பொறுப்புகள்

[தொகு]

1975 முதல் இபொக-வில் முழுநேர ஊழியராகப் பணியாற்றத் தொடங்கினார்.[2]

போட்டியிட்ட தேர்தல்கள்

[தொகு]
தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு விகிதம் எதிர்கட்சி வேட்பாளர் எதிர்கட்சி எதிர்கட்சி வாக்கு விகிதம்
1989[3] நாகப்பட்டினம் இபொக வெற்றி 48.78 வீரமுரசு என். எசு இதேகா 46
1991 தோல்வி 44 பத்மா இதேகா 48
1996[4] வெற்றி 54.17 கலைக்கோவன் எம் இதேகா 23.77
1998[5] வெற்றி 59 கே. கோபால் அதிமுக 38
1999 தோல்வி 45 ஏ. கே. எஸ். விஜயன் திமுக 49
2009 தோல்வி 42 ஏ. கே. எஸ். விஜயன் திமுக 48
2019[6] வெற்றி 52 சரவணன் எம் அதிமுக 31

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக மொத்தம் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வராசு, தமிழ்நாட்டின் காவிரி ஆற்றுப் படுகை மாவட்டங்களுக்குத் தொடர்வண்டித் திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்தார்.[1] 2019-இல் மட்டும் மொத்தம் 29 மக்களவை உரையாடல்களில் கலந்து கொண்டு பங்களிப்பைச் செலுத்தியுள்ளார்.[7]

மறைவு

[தொகு]

சிறுநீரகப் பாதிப்பு காரணமாக 2024-க்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட செல்வராசுவுக்கு அவர் சகோதரி சாரதாமணி சிறுநீரக தானம் செய்தார். பிறகு சனவரி 2024-இல் மூச்சுத்திணறல் காரணமாகத் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.[8][9] அதன்பின் சிறுநீரகம் மற்றும் இதயச் சிக்கலால் மே 3 அன்று சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மே 13 விடியற்காலையில் தன் 68-ஆம் அகவையில் காலமானார். அப்போது அவர் மக்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைய 10 நாள்களே இருந்தன.

செல்வராசுவின் மறைவுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடல், சித்தமல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டது. மே 14 அன்று காலையில் அவரது இல்லத்தின் முன்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இபொக தேசிய செயலாளர் நாராயணன், மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், திமுக பொருளாளர் த.ரா.பாலு உள்ளிட்டோர் செல்வராசுவுக்கு அஞ்சலி செலுத்திப் பேசினர்.[10] பின் அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர், தலைவர்கள் இரங்கல்". Hindu Tamil Thisai. 2024-05-14. Retrieved 2024-05-14.
  2. காமதேனு (2024-05-13). "என் மீது பாசமும், நன்மதிப்பும் கொண்டவர்... செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!". காமதேனு. Retrieved 2024-05-14.
  3. Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
  4. "Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. Retrieved 2017-06-22.
  5. Volume I, 1998 Indian general election, 12th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
  6. "நாகை மக்களவைத் தொகுதிஇந்திய கம்யூ. வேட்பாளர் எம். செல்வராசு வெற்றி". தினமணி (மே 27, 2019)
  7. "என்ன செய்தார் எம்.பி.? - அதிக விவாதங்களில் பங்கேற்ற தமிழக எம்.பி.க்கள் விவரம்". Hindu Tamil Thisai. 2019-12-28. Retrieved 2024-05-14.
  8. "நாகை எம்.பி. செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி". Hindu Tamil Thisai. 2024-01-11. Retrieved 2024-05-14.
  9. தினத்தந்தி (2024-05-13). "நாகை எம்.பி. செல்வராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்". www.dailythanthi.com. Retrieved 2024-05-14.
  10. "நாகை எம்.பி செல்வராஜின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம்". Hindu Tamil Thisai. 2024-05-14. Retrieved 2024-05-15.
  11. Bharat, E. T. V. (2024-05-14). "நாகை எம்.பி செல்வராஜ் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்! - MP SELVARAJ LAST RITES". ETV Bharat News. Retrieved 2024-05-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._செல்வராசு&oldid=4228776" இலிருந்து மீள்விக்கப்பட்டது