திரு. வி. க. அரசினர் கலைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரு. வி. க. அரசு கலைக் கல்லூரி
வகைஇருபாலருக்கான அரசு கலைக் கல்லூரி
உருவாக்கம்1970
முதல்வர்முனைவர் கோ. கீதா
அமைவிடம், ,
வளாகம்100 ஏக்கர்
இணையதளம்http://www.thiruvikacollege.co.in

திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி (Thiru Vi Ka Governent Arts College) என்பது இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் திருவாரூரில் செயல்பட்டுவரும் இருபாலருக்கான அரசினர் கலைக் கல்லூரியாகும். 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[1] இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

வரலாறு[தொகு]

1970ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி அரசினர் கலைக் கல்லூரி என்ற பெயரில் 100 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி 1983ஆம் ஆண்டில் திரு. வி. கலியாண சுந்தரனார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி திரு. வி. க. அரசு கலைக் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அமைவிடம்[தொகு]

நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் கிடாரம்கொண்டானில், நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், திருவாரூரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் இந்த கல்லூரி அமைந்துள்ளது.

வழங்கும் படிப்புகள்[தொகு]

இளநிலை கலைப்பாடங்கள்[தொகு]

  • பி. ஏ தமிழ்
  • பி. ஏ ஆங்கிலம்
  • பி ஏ வரலாறு (தமிழ்/ஆங்கில வழி சுழற்சி 1)
  • பி. ஏ வரலாறு (ஆங்கிலவழி சுழற்சி 2)
  • பி. ஏ. பொருளியல் (தமிழ்/ஆங்கில வழி சுழற்சி 1)
  • பி. ஏ, பொருளியல் (ஆங்கில வழி சுழற்சி 2)
  • பி. ஏ. இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்
  • பி. காம். (தமிழ்/ஆங்கில வழி சுழற்சி 1)
  • பி. காம் (ஆங்கில வழி சுழற்சி 2)
  • பி. பி. ஏ

அறிவியல் பாடங்கள்[தொகு]

  • பி. எஸ்சி கணிதம் (தமிழ்/ஆங்கில வழி)
  • பி. எஸ்சி இயற்பியல் (தமிழ்/ஆங்கில வழி)
  • பி. எஸ்சி வேதியியல் (தமிழ்/ஆங்கில வழி)
  • பி. எஸ்சி விலங்கியல் (தமிழ்/ஆங்கில வழி)
  • பி. எஸ்சி கணினி அறிவியல் (தமிழ்/ஆங்கில வழி சுழற்சி 1)
  • பி. எஸ்சி கணினி அறிவியல் (ஆங்கில வழி சுழற்சி 2)
  • பி. எஸ்சி காட்சித் தொடர்பியல் (ஆங்கில வழி)
  • பி. எஸ்சி தாவரவியல் (ஆங்கில வழி)

முதுநிலை கலைப்பாடங்கள்[தொகு]

  • எம். ஏ தமிழ்
  • எம். ஏ ஆங்கிலம்
  • எம் ஏ வரலாறு
  • எம். ஏ. பொருளியல்
  • எம். காம்.

அறிவியல் பாடங்கள்[தொகு]

  • எம். எஸ்சி கணிதம்
  • எம். எஸ்சி இயற்பியல்
  • எம். எஸ்சி வேதியியல்
  • எம். எஸ்சி விலங்கியல்
  • எம். எஸ்சி கணினி அறிவியல்
  • எம். எஸ்சி காட்சித் தொடர்பியல்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]