வீரயுக நாயகன் வேள்பாரி
| வீரயுக நாயகன் வேள்பாரி | |
|---|---|
| நூல் பெயர்: | வீரயுக நாயகன் வேள்பாரி |
| ஆசிரியர்(கள்): | சு. வெங்கடேசன் |
| வகை: | வரலாற்றுப் புதினம் |
| துறை: | வரலாறு |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 1408 |
| பதிப்பகர்: | விகடன் பிரசுரம், சென்னை |
| பதிப்பு: | 29 திசம்பர், 2018 |
வீரயுக நாயகன் வேள்பாரி, சு. வெங்கடேசன் எழுதிய வரலாற்றுப் புதின நூலாகும். இதனை ஆனந்த விகடன் தொடராக 111 வாரங்கள் வெளியிட்டது. மக்களின் வரவேற்பினைப் பெற்ற இத்தொடர், விகடன் பதிப்பகத்தாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு மணியம் செல்வன் ஓவியங்களை வரைந்துள்ளார்.[1] [2]
கதை
[தொகு]இந்நூல், வள்ளல் பாரியின் வரலாற்றைக் கூறும் புதினமாகும்.
வெளியீடு
[தொகு]1408 பக்கங்களை இரண்டு பாகங்களாகக் கொண்ட இந்நூலினை மு.க.ஸ்டாலின் வெளியிட முதல் பாகத்தைத் தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனும் இரண்டாம் பாகத்தைத் சூழலியலாளர் கோ.சுந்தர்ராஜனும் பெற்றுக்கொண்டனர்.[3] [4] சூலை 2025இல் இந்நூல் ஒரு இலட்சம் பிரதிகள் விற்கப்பட்டதற்காக விழா கொண்டாடப்பட்டது.[5][6]
விருது
[தொகு]மலேசியா டான் ஸ்ரீ கே.ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் இந்நூலினை அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக தோ்வு செய்துள்ளது.[7] [8] 2018 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடனின் சிறந்த புதினத்துக்கான விருது இந்நூலுக்கு வழங்கப்பட்டது.[9]
திரைப்படம்
[தொகு]இப்புதினத்தை திரைப்படமாக எடுக்க முயற்சி நடைபெறுகிறது. இக்கதையின் திரைப்பட உரிமையை ஷங்கர் வாங்கியுள்ளார்.[10] [11] [12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ முரளிதரன் காசிவிஸ்வநாதன் (14 செப்டெம்பர் 2018). "வேள்பாரி: 50 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைத்த புனைக் கதைத் தொடர்". கட்டுரை. பிபிசி தமிழ்.
- ↑ AKILA KANNADASAN. "In the land of the mountain king". The Hindu.
- ↑ விகடன் டீம் (29 திசம்பர் 2018). "'வேள்பாரி புத்தகமல்ல அது ஒரு புரட்சி' - மு.க.ஸ்டாலின் புகழாரம்!". விகடன்.
- ↑ சக்தி தமிழ்ச்செல்வன் (2 சனவரி 2019). "கலைஞர் இருந்திருந்தால் `வேள்பாரி'க்காக வெங்கடேசனை உச்சிமோந்து பாராட்டியிருப்பார்! - மு.க.ஸ்டாலின்". கட்டுரை. விகடன்.
- ↑ Kolappan, B. (2025-07-09). "How a novel inspired parents to name their children after its characters". The Hindu (in Indian English). Retrieved 2025-07-16.
- ↑ "Velpaari Celebration Event Videos". YouTube (in ஆங்கிலம்). Retrieved 2025-07-16.
- ↑ "MP's novel gets award from literary forum in Malaysia". The Hindu.
- ↑ செ. சல்மான் பாரிஸ் (2 சனவரி 2021). "வீரயுக நாயகன் வேள்பாரிக்கு மலேசிய விருது... சு.வெங்கடேசன் பெருமிதம்!". கட்டுரை. விகடன்.
- ↑ "ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2018". விகடன். 8 சனவரி 2019.
{{cite web}}: CS1 maint: year (link) - ↑ "ஷங்கர் - சூர்யா காம்போவில் படமாகிறது 'வேள்பாரி' நாவல்?". கட்டுரை. இந்து தமிழ். 10 செப்டெம்பர் 2022.
- ↑ "வேள்பாரி - தனுஷ் ஆசைப்பட்ட கதையில் சூர்யா?". கட்டுரை. தினமலர். 10 செப்டெம்பர் 2022.
- ↑ "படமாகும் சு.வெங்கடேசனின் 'வேள்பாரி' - இயக்குநர் ஷங்கருடன் கைகோக்கும் ரன்வீர் சிங்?". கட்டுரை. இந்து தமிழ். 7 நவம்பர் 2022.