உள்ளடக்கத்துக்குச் செல்

விகடன் பிரசுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விகடன் பிரசுரம், விகடன் குழுமத்தினால் நடத்தப்படுகின்ற ஒரு பதிப்பகமாகும். 600க்கும் மேற்பட்ட புத்தகங்களை பல்வேறு துறைகளின் கீழ் இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விகடன் குழுமத்தினால் நடத்தப்படுகின்ற இதழ்களில் தொடர்களாக வந்து மக்களின் வரவேற்பினை பெற்றவை தனிப் புத்தகங்களாக வெளியிடப்படுகின்றன.

இணைய வழியிலான புத்தக விற்பனையும் தற்போது விகடன் பிரசுரத்தால் நடத்தப்படுகிறது. இவை தவிர, பணக்கட்டளை அல்லது வங்கி வரைவோலையாகவும் பணம் செலுத்திப் புத்தகங்களைப் பெறும் முறையும் உள்ளது.

பிரிவுகள்

[தொகு]

அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்

[தொகு]

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம், பெண்ணின் மறுபக்கம், தலைமைச் செயலகம் ஆன்லைனில் A to Z, லேப்டாப் A to Z, அச்ச ரேகை.. தீர்வு ரேகை, வருங்காலத் தொழில்நுட்பம், கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2)

இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்

[தொகு]

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி, கதாவிலாசம், துணையெழுத்து, கேள்விக்குறி நூல்களும், இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும், காதல் பால், கம்பனில் ராமன் எத்தனை ராமன் போன்ற நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சட்டம்

[தொகு]

தகவல் அறியும் உரிமைச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம், தைரியமாக சொத்து வாங்குங்கள், நீங்களும் நுகர்வோரே போன்ற நூல்கள் சட்டம் சம்மந்தமாக வெளியிடப்பட்டுள்ள நூல்களாகும்.

ஆன்மிகம்

[தொகு]

அவதார புருஷன், மகா சுதர்ஸன வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு, சாக்கிய முனி புத்தர், தமிழ்மறை தந்த பன்னிருவர் என பல ஆன்மீக நூல்கள் விகடன் பிரசுகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. சக்தி விகடன் ஆன்மீக இதழில் வெளிவந்து புகழ்பெற்ற ஆன்மீக தொடர்கள் புத்தகங்களாக வெளியிடப்படுகின்றன.

ஜோக்ஸ் - கார்ட்டூன்ஸ்

[தொகு]

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் (பாகம் 1), மதன் கார்ட்டூன்ஸ் (பாகம் 1), விகடன் ஜோக்ஸ் 2008, ஸ்ரீதர் ஜோக்ஸ், தாணு ஜோக்ஸ், ராஜு ஜோக்ஸ், கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1), டயலாக்,கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2) போன்ற நூல்கள் மக்களின் வரவேற்பினை பெற்றவை.

சமையல்

[தொகு]

கிச்சன் கிளினிக், சாந்தாஸ் சமையல், 30 நாள் 30 ருசி, வெரைட்டி ஃபாஸ்ட் புட் போன்ற நூல்கள் சமையல் கலை சார்ந்து வெளியிடப்பட்டுள்ளன.

ஆன்மிக வரலாறு

[தொகு]

தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்

[தொகு]

இல்லறம்

[தொகு]

சுட்டிகளுக்காக

[தொகு]

பெண்களுக்காக

[தொகு]

சமூக, அரசியல் கட்டுரைகள்

[தொகு]

பொது

[தொகு]

புகழ்பெற்ற என்சைக்லோபீடியா ப்ரிட்டானிகா தமிழில் விகடன் பிரசுரத்தினரால் வெளியிடப்பட்டது.

சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை

[தொகு]

மொழிபெயர்ப்பு நூல்கள்

[தொகு]

பொன்னியின் செல்வன்

[தொகு]

2216 பக்கங்களைக் கொண்ட அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தினை 2012 ஜனவரியில் விகடன் பிரசுரம் வெளியிட்டது. ஓவியர் மணியம் தீட்டிய வண்ண ஓவியங்களுடன் பிரமிப்பான வடிவில் வெளிவந்து புகழ்பெற்றது.

வெளி இணைப்புகள்

[தொகு]

விகடன் பிரசுரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விகடன்_பிரசுரம்&oldid=2117360" இலிருந்து மீள்விக்கப்பட்டது