சுட்டி விகடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுட்டி விகடன்  
Sutti vikadan.jpg
துறை குழந்தைகளுக்கான இதழ்
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: பாலசுப்ரமணியன்[1]
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகத்தார் விகடன் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: வார இதழ்

சுட்டி விகடன் என்பது விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் குழந்தைகளுக்கான இதழாகும். [2]

வாசல், ஸ்பெஷல், எஃப்.ஏ. பக்கங்கள், பொது அறிவு, தொடர்கள், புதிரோ புதிர், காமிக்ஸ், விளையாட்டு, கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. நீதி நெறிக்கதைகள், விஞ்ஞான கட்டுரைகள், வரலாற்று குறிப்புகள் என்று குழந்தைகளுக்காகவே எழுதப்படுகின்றன.

மாணவர்களுக்கு பயன் தரும் எஃப் ஏ பக்கங்கள் ஒவ்வொரு இதழிலும் 16 பக்கங்கள் வெளியிடப் படுகின்றன.

ஒவ்வோர் இதழோடு மாணவர்களே தயாரிக்கும் என் பள்ளி என் சுட்டி இதழ் இணைப்பாக அளிக்கப்படுகிறது.

கடல் பயணங்கள் நூல்[தொகு]

சுட்டி விகடனில் "சென்றதும் வென்றதும்" எனும் தலைப்பில் வெளியான வரலாற்று கட்டுரைகளை கடல் பயணங்கள் எனும் நூலாக வெளியிட்டுள்ளனர். இதன் ஆசிரியர் மருதன். கிழக்குப் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.exchange4media.com/news/story.aspx?Section_id=5&News_id=16808
  2. [வியாபார வியூகங்கள் நூல்- சதீஸ் கிருஷ்ணமூர்த்தி - கிழக்குப் பதிப்பகம் - கோர் காம்பெடன்ஸ் பகுதியில் விகடன் குழுமத்தின் வியாபரா நுணுக்கம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.]
  3. [கடல் பயணங்கள் - தினமணி நாளிதழ் - 01st January 2018]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டி_விகடன்&oldid=2636568" இருந்து மீள்விக்கப்பட்டது