தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
Logo of Tamil Nadu Untouchability Eradication Front.jpg
தலைவர்
ப.சம்பத்
பொதுச் செயலாளர்
க.சாமுவேல்ராஜ்
பொருளாளர்
செந்தில் குமார்
வலைத்தளம்http://tnuef.org

தமிழ்நாடு‍ தீ்ண்டாமை ஒழிப்பு முன்னணி , 2007 ஆம் ஆண்டு‍ உருவாக்கப்பட்ட இயக்கமாகும் . சமூகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களுக்கு‍ எதிராகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து‍ போராடிக் கொண்டிருக்கும் ஒரு‍ இயக்கமாகும்.

மாநாடுகள் மற்றும் தலைமை[தொகு]

இம்முன்னணியின் முதல் மாநில மாநாடு 2010 ல் புதுக்கோட்டையில் நடைபெற்றது. தலைவராக பி.சம்பத், பொதுச் செயலாளராக கே.சாமுவேல் ராஜ், பொருளாளராக ஆர். ஜெயராமன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2015 மே 16 முதல் 18 வரை இரண்டாவது மாநில மாநாடு விருதுநகரில் நடைபெற்றது.

இயக்கங்கள்[தொகு]

தீண்டாமைச் சுவர் தகர்ப்பு[தொகு]

உத்தப்புரம்[தொகு]

உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி பல கட்டப் போராட்டங்களை நடத்தி, தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டது.[1]

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் தகர்ப்பிற்கு பின்னர் முன்னணியின் முயற்சியால் வீழ்ந்த சுவர்கள்[சான்று தேவை]-

  • கோயம்பத்தூர் நாகராஜபுரம்
  • கோயம்பத்தூர் பெரியார்நகர்
  • திருச்சி எடமலைப்பட்டி புதூர்
  • சேலம் காந்திமகான் நகர்

ஈச்சங்கோட்டை[தொகு]

ஈச்சங்கோட்டை கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சவரம் செய்யும் கடைகளில் முடி‍ திருத்தம் செய்ய அனுமதிக்கப்படாததை எதிர்த்த இயக்கம் செப்டம்பர் 30 அன்று‍ நடைபெற்றது. போராட்டத்தின் விளைவாக அம்மக்கள் முடிதிருத்த அக்கடைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[2]

ஆலய நுழைவுப் போராட்டங்கள்[தொகு]

பந்தப்புளி, உத்தப்புரம், செட்டிபுலம், காங்கியனூர் ,காளப்பட்டி முதலிய இடங்களில் ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடைபெயற்றுள்ளன.[சான்று தேவை]

தெம்மாவூர் பேருந்து நிழற்குடை இருக்கை[தொகு]

தலித்துகள் இருக்கையில் அமரக்கூடாது என்ற சாதி ஆதிக்க வெறியில் இடிக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை இருக்கைகள் மீண்டும் நிறுவப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]