உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதவன் தீட்சண்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



ஆதவன் தீட்சண்யா
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 சூன் 2018
முன்னையவர்சு. வெங்கடேசன்
துணைத்தலைவர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
பதவியில்
?–?
முன்னையவர்?
பின்னவர்?
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
எஸ். எம். இரவிச்சந்திரன்

6 மார்ச்சு 1964 (1964-03-06) (அகவை 61)
ஓமலூர் / அரூர், பிரிக்கப்படாத
சேலம் மாவட்டம்,
மதராசு மாநிலம் (தற்போது சேலம் (அல்லது) தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு),
இந்தியா
குடியுரிமைஇந்தியர்
தேசியம்தமிழர்
துணைவர்
  • மீனா (தி. 1993)
உறவுகள்7 உடன்பிறப்புகள்
பிள்ளைகள்தீட்சண்யா (மகள்)
பெற்றோர்இரத்தினம்மா (தாய்)
மாரியப்பன் (தந்தை)
வாழிடம்ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு‍, இந்தியா
பணிஎழுத்தாளர்
புனைப்பெயர்(s)ஆதி[1]
பள்ளிக்கூடத்தாள்,
தகடூர் ஆதவன்
ஓசூர் ஆதவன்

எஸ். எம். இரவிச்சந்திரன்[2] என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்சண்யா - Aadhavan Dheetchanya (பிறப்பு: 6 மார்ச் 1964). ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், [3][4] [5] தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். கவிஞர், எழுத்தாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.[6][7] புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் மதிப்புறு ஆசிரியராகவும் செயல்பட்டார்.[8]

தொடக்க வாழ்க்கை

அன்றைய பிரிக்கப்படாத சேலம் மாவட்டம் ஈச்சம்பாடியைச் சேர்ந்த இரத்தினம்மாவுக்கும் உத்தமசோழபுரத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் 6 மார்ச் 1964 அன்று பிறந்தார் ஆதவன் தீட்சண்யா. இவர்பின் பிறந்தோர் அறுவர்.[9] அரூருக்கும் சேலத்துக்கும் இடைப்பட்ட அலமேலுபுரம் என்கிற சிற்றூர் சார்ந்த ஒண்டிக்கொட்டாயில் (நிலத்தில் தனியாக உள்ள வீடு) வளர்ந்தார்.[2]

கல்வி

பன்னிரண்டாம் வகுப்பு வரை பாப்பிரெட்டிப்பட்டி பள்ளியில் பயின்ற தீட்சண்யா, பின் தருமபுரி அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றார்.[9]

பணி

கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே தொலைபேசி இயக்குநர் பணிக்குத் தேர்வானார்.[9]

இலக்கியப்பணி

இளமையில் மாலைமதி உள்ளிட்ட கேலிச் சித்திர நூல்களை மட்டுமே வாசித்தும் சிற்சில சமயங்களில் சிறார் நடையில் எழுதியும் வந்த தீட்சண்யா, கல்லூரிக்காலத்தில் தனக்கு அறிமுகமான சண்முகம் என்ற அரசு ஊழியர் அளித்த ஊக்கத்தால் தணிகைச்செல்வன் இயற்றிய ஒரு சமூகசேவகி சேரிக்கு வந்தாள் என்ற கவிதைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினார். இது தனக்கு இலக்கிய உலகுக்கான ஒரு "பெரிய திறப்பு" எனவும் குறிப்பிட்டார்.[9]

கவிதைத் தொகுப்புகள்

  • புறத்திருந்து (1996) (தமுஎகச ஓசூர் கிளை)
  • பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம் (2003)
  • தந்துகி[10]
  • ஆதவன் தீட்சண்யா கவிதைகள் (சந்தியா பதிப்பகம்)
  • மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் (2016)

சிறுகதைகள்

புதினங்கள்

கட்டுரைகள்

  • இட ஒதுக்கீடல்ல, மறு பங்கீடு
  • ஆகாயத்தில் எறிந்த கல் (2011)
  • ஒசூர் எனப்படுவது யாதெனின் (2014) (மலைகள் பதிப்பகம்)
  • இதுவொன்னும் பழைய விசயம் இல்லீங் சாமீ
  • கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது (2016)
  • எஞ்சிய சொல்
  • தூர்ந்த மனங்களைத் தோண்டும் வேலை

நேர்காணல்கள்

திரைத்துறையில்

தனி வாழ்க்கை

1993-ஆம் ஆண்டு மீனா என்பவரை மணந்தார். இவ்விணையருக்கு தீட்சண்யா என்ற மகள் பிறந்தபின் அவர் பெயரையும் இணைத்துக்கொண்டு 'ஆதவன் தீட்சண்யா' ஆனார்.[2]

மேற்கோள்கள்

  1. TNSF218 ஆதவன் தீட்சண்யாவின் "நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்" மணிமொழி வீராசாமி, retrieved 2022-10-21
  2. 2.0 2.1 2.2 "எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா" (in ஆங்கிலம்). Retrieved 2022-10-20.
  3. Reporter, Staff (2019-06-20). "Writers, artists demand scrapping of draft NEP". The Hindu (in Indian English). Retrieved 2022-06-25.
  4. "கருத்துச் சுதந்திரம் உயிர்மூச்சு போன்றது". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/jun/26/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-3179205.html. பார்த்த நாள்: 8 April 2022. 
  5. "தொ.பரமசிவன் இறுதி நிகழ்வில் மக்கள் கண்ணீர் அஞ்சலி". BBC News தமிழ். Retrieved 2022-06-25.
  6. "Adhavan Deetchanya". www.poetryinternational.com (in டச்சு). Retrieved 2022-08-19.
  7. "மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி அதை எதிர்கொள்வதுதான்" - எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா". ஆனந்த விகடன். https://www.vikatan.com/oddities/miscellaneous/143624-nterview-with-writer-aadhavan-dheetchanya-about-his-stress-relief-techniques. பார்த்த நாள்: 25 June 2022. 
  8. "தயவுசெய்து ஜாதியின் நுட்பத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!" பா.இரஞ்சித்". விகடன். https://www.vikatan.com/social-affairs/politics/105489-please-know-about-caste-issues-says-paranjith. பார்த்த நாள்: 25 June 2022. 
  9. 9.0 9.1 9.2 9.3 "Tamil | Tamilnadu | Art | Culture | Aadhavan Dheetchanya | Interview". keetru.com. Retrieved 2022-10-20.
  10. "Tamil | Aadhavan Dheetchanya | Interview | Caste | Dalit Issue". www.keetru.com. Retrieved 2022-10-20.
  11. ValaiTamil. "சிறுகதை". ValaiTamil. Retrieved 2021-04-14.
  12. 12.0 12.1 வீ.அரசு. "சிறுகதை தொகுதிகள் (1980 - 2010) பட்டியல்". www.keetru.com. Retrieved 2022-10-21.
  13. "மீசை அலங்காரமா? அதிகாரமா?". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=1177739. பார்த்த நாள்: 8 April 2022. [தொடர்பிழந்த இணைப்பு]
  14. "நான் என்னென்ன வாங்கினேன்?". Hindu Tamil Thisai. Retrieved 2022-04-08.
  15. "எனக்குப் பிடித்த புத்தகங்கள்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jan/08/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3072740.html. பார்த்த நாள்: 8 April 2022. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதவன்_தீட்சண்யா&oldid=4222264" இலிருந்து மீள்விக்கப்பட்டது