இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
இயக்கம்அதியன் ஆதிரை
தயாரிப்புபா. ரஞ்சித்
கதைஅதியன் ஆதிரை
இசைடென்மா
நடிப்புஅட்டகத்தி தினேஷ்
ஆனந்தி (நடிகை)
ஒளிப்பதிவுகிசோர் குமார்
படத்தொகுப்புசெல்வா ஆர்கே
வெளியீடுதிசம்பர் 6, 2019 (2019-12-06)

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்பது 2019 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை புது முக இயக்குனர் அதியன் ஆதிரை எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை பா. ரஞ்சித் தனது நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தார்.

இக்கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனைவின் வழியே எழுதப்பட்டதாகும். கிசோர் குமார் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். "கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" என்ற இசைக்குழுவில் ஒருவரான டென்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[1] [2][3] 6 டிசம்பர் 2019 இல் இத்திரைப்படம் வெளிவந்தது. விமர்சகர்களின் பரவலான பாராட்டினைப் பெற்றது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் அட்டக்கத்தி திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்திருந்தார், அது போல ஆனந்தி பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர்கள் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக மீண்டும் இத்திரைப்படத்தில் இணைந்தனர். [4]

ஆதாரங்கள்[தொகு]