ஜி. மாரிமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. மாரிமுத்து
பிறப்பு12 சூலை 1967 (1967-07-12) (அகவை 55)
இந்திய ஒன்றியப், தமிழ்நாடு, தேனி, பசுமலை
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2008– தற்போது வரை

ஜி. மாரிமுத்து என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும் நடிகருமாவார். இவர் குறிப்பாக தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறார். கண்ணும் கண்ணும் (2008) படத்தில் இயக்குநராக அறிமுகமான பிறகு , புலிவால் (2014) படத்தை இயக்கியதோடு, நடிகராக துணை வேடங்களில் நடித்துவருகிறார்.

தொழில்[தொகு]

மாரிமுத்து தமிழ்நாட்டின், தேனி மாவட்டத்தின் பசுமலை கிராமத்தைச் சேர்ந்தவர். திரைப்பட இயக்குநராக விரும்பிய மாரிமுத்து 1990 ஆம் ஆண்டு, தனது வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவந்தார். துவக்கத்தில் உணவகங்களில் பணியாளராக வேலை செய்தார். பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக இணைந்து அவரது படங்களான அரண்மனைக்கிளி (1993), எல்லாமே என் ராசாதான் (1995) படங்களில் பணிபுரிந்தார். பாடலாசிரியர் வைரமுத்துவுடன் இலக்கியம் வழியாக அறிமுகமானார். மாரிமுத்து பின்னர் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட திரைப்பட படைப்பாளிகளிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். சிலம்பராசனின் அணியில் மன்மதன் (2004) படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். [1] ஜி.மரிமுத்து கண்ணும் கண்ணும் (2008) படத்தில் இயக்குநராக அறிமுகமானார். பிரசன்னா, உதயதாரா ஆகியோர் நடித்த நடித்த காதல் படம் இது ஆகும். இந்த படம் வணிக ரீதியாக சிறப்பான வெற்றியை ஈட்டவில்லை, ஆனால் விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றது. பிஹைண்ட்வுட்ஸ்.காம் எழுதிய விமர்சனத்தில் "ஜி. மரிமுத்து, கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம் ஆகியவற்றுடன் அறிமுகமானது படமான இதில் அண்மைய காலத்தில் மிகவும் தூய்மையான, மிகவும் நேர்மையான, அன்பான காதல் கதைகளில் ஒன்றை வழங்கியுள்ளார்". [2] அதேபோல், சிஃபி.காம் எழுதிய விமர்சனத்தில், "தமிழ் திரைத்துறையில் துணிச்சலான புதிய இயக்குனர்களில் ஒருவராக மரிமுத்து வந்துள்ளார். இவர் வணிக வடிவத்திற்குள் தனது வித்தியாசமான காதல் கதையை வழங்க முயற்சிக்கின்றார்". [3] மரிமுத்து பின்னர் மலையாள திரைப்படமான சப்பா குரிஷு (2011) படத்தின் கதையைக் கொண்டு புலிவால் (2014) படத்தை உருவாக்கினார். [4]

2010 களில், இவர் நடிப்புத் தொழிலில் கவனம் செலுத்தி, தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்தார். மிஷ்கின் இவரை யுத்தம் செய் (2011) படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார். அதில் அவர் ஊழல் நிறைந்த காவல் அதிகாரியாக நடித்தார். படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆரோகனம் (2012), நிமிர்ந்து நில் (2014), கொம்பன் (2015) உள்ளிட்ட படங்களில் நடித்தார். பெரும்பாலும் காவல் அதிகாரியாக நடித்தார். விஷாலின் மருது (2016) படத்தில் இவரது நடிப்பானது இவரை கத்தி சண்டை (2016) படத்தில் ஒப்பந்தம் செய்ய தூண்டுதலானது. [5]

திரைப்படவியல்[தொகு]

இயக்குனராக
ஆண்டு படம் குறிப்புகள்
2008 கண்ணும் கண்ணும
2014 புலிவால்
நடிகராக

குறிப்புகள்[தொகு]

 

  1. https://www.youtube.com/watch?v=dQKRQPxdbEg
  2. "Kannum Kannum Movie Review - Behindwoods.com - Prasanna Udhayathara Vadivelu Vijayakumar stills picture image gallery". www.behindwoods.com.
  3. "Kannum Kannum". Sify. 2017-01-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-06-17 அன்று பார்க்கப்பட்டது.
  4. "'Puli Vaal' not exactly a remake". The New Indian Express.
  5. "Heroine of Vishal's 'Kaththi Sandai' - Tamil News". IndiaGlitz.com. 28 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._மாரிமுத்து&oldid=3539016" இருந்து மீள்விக்கப்பட்டது