உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனந்தி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தி
பிறப்புரக்சிதா
9 திசம்பர்
வாரங்கல்
மற்ற பெயர்கள்ரக்சிதா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012 - தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சாக்ரடிஸ் (தி. 2021)
பிள்ளைகள்1

ஆனந்தி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2012 ஆவது ஆண்டில் பஸ் ஸ்டாப் என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் பிரபு சாலமனின் கயல் என்ற வெற்றித் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ்த் திரையுலகில் உள்ள வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார்.[1]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2012பஸ் ஸ்டாப்சீமாதெலுங்கு
2013பிரியத்தமா நீவசட குசலமாபிரீத்திதெலுங்கு
2014கிரீன் சிக்னல்ஜெஸ்ஸிதெலுங்கு
பொறியாளன்சாந்திதமிழ்
கயல்கயல்விழிதமிழ்
2015விசாரணைதமிழ்
சண்டி வீரன்தமிழ்
திரிஷா இல்லனா நயன்தாராரம்யாதமிழ்
2016எனக்கு இன்னொரு பேரு இருக்குஹேமாதமிழ்
கடவுள் இருக்கான் குமாருநான்சிதமிழ்
2017ரூபாய்பொன்னிதமிழ்
2018மன்னர் வகையறாஇளையராணி[2]தமிழ்
பரியேறும் பெருமாள்ஜோதி மகாலக்ஷ்மிதமிழ்

சொந்த வாழ்க்கை

[தொகு]

7 சனவரி 2021 அன்று தெலுங்கானா மாநிலத்திலுள்ள வாரங்கலில் சாக்ரடிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[3] தற்பொழுது அவருக்கு ஒரு மகன் உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தி_(நடிகை)&oldid=4378191" இலிருந்து மீள்விக்கப்பட்டது