செம்மலர் (இதழ்)
செம்மலர் | |
---|---|
துறை | இலக்கிய இதழ் |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | எஸ். ஏ.பெருமாள் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | தீக்கதிர் (இந்தியா) |
வெளியீட்டு இடைவெளி: | மாதம் ஒரு முறை |
இணைப்புகள் | |
செம்மலர் என்பது தமிழில் வெளிவரும் ஒரு இலக்கிய மாத இதழ். இது கடந்த நாற்பது ஆன்டுகளாக மதுரையிலிருந்து வெளிவருகிறது. நல்ல இலக்கியத்தை வளர்த்தெடுப்பது, நச்சு இலக்கியங்களை எதிர்ப்பது என்ற உயரிய கோட்பாடுகளுடன் பரவலான வாசகர்களைக் கொண்ட செம்மலர் இதழின் ஆசிரியராக எஸ். ஏ. பெருமாள் பணியாற்றுகிறார். இன்று தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களுள் பெரும்பாலோர் செம்மலரில் எழுதத்துவங்கியவர்கள்தான். புதிதாக எழுத ஆர்வம் கொண்ட இளம் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் முக்கிய இலக்கியப் பணியினையும் செம்மலர் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
வரலாறு[தொகு]
செம்மலர் இதழானது இந்திய மார்க்சிய பொதுவுடமைக் கட்சி சார்பில் துவக்கப்பட்டு வெளியாகும் மாதப் பத்திரிகை ஆகும். இந்த முற்போக்கு இலக்கிய இதழும் புத்தக வடிவத்தில்தான் வருகிறது. மார்க்சிய தத்துவ நோக்கில் தீவிரக் கருத்துக்களை வலியுறுத்தும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் இதில் இடம் பெறுகின்றன.
‘நல்ல புதினம்' என்று இலக்கிய ரசிகர்களின் மதிப்புரையைப் பெற்றுள்ள கு. சின்னப்ப பாரதியின் 'தாகம்' செம்மலரில் தொடர் கதையாக வெளிவந்ததுதான். 'மலரும் சருகும்', 'தேநீர்' ஆகிய முற்போக்கு புதினங்களை எழுதிய டி. செல்வராஜ் இந்த இதழில் 'மூலதனம்' என்ற புதினத்தைத் தொடர்ந்து எழுதினார். ‘இலக்கியச் சிந்தனை' அமைப்பின் பரிசுகளைப் பெற்ற பல சிறுகதைகள் 'செம்மலரி'ல் வந்திருக்கின்றன. 'செம்மலர்' தற்போதும் இடதுசாரிகளின் இலக்கிய இதழாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல் (மணிவாசகர் பதிப்பகம்): pp. 162-167. https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8C. பார்த்த நாள்: 13 நவம்பர் 2021.