விசயகாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜயகாந்த்
Vijayakanth at a function cropped.jpg
தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
13 மே 2011 – 19 மே 2016
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா
சபாநாயகர் து. ஜெயக்குமார்
ப. தனபால்
முன்னவர் ஜெ. ஜெயலலிதா
பின்வந்தவர் மு. க. ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
13 மே 2011 – 19 மே 2016
முன்னவர் எஸ். சிவராஜ்
பின்வந்தவர் கே. வசந்தம் கார்த்திகேயன்
தொகுதி ரிஷிவந்தியம்
பதவியில்
8 மே 2006 – 8 மே 2011
முன்னவர் ஆர். கோவிந்தசாமி
பின்வந்தவர் வி. முத்துக்குமார்
தொகுதி விருத்தாச்சலம்
தனிநபர் தகவல்
பிறப்பு விசயராஜ் அழகர்சாமி
25 ஆகத்து 1952 (1952-08-25) (அகவை 70)
மதுரை, சென்னை மாநிலம் (தற்போது தமிழ்நாடு, இந்தியா)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) பிரேமலதா விஜயகாந்த்
பிள்ளைகள் விசய பிரபாகரன்,
சண்முக பாண்டியன்
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பணி * நடிகர்
விருதுகள் * மதிப்புறு முனைவர் பட்டம் (2011)
பட்டப்பெயர்(கள்) புரட்சி கலைஞர், கேப்டன்.

விசயகாந்து (Vijayakanth, பிறப்பு: 25 ஆகத்து 1952) ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவன தலைவரும், பொதுச்செயலாளரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

இளமைக்காலம்

விசயகாந்து என்னும் விசயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விசயகாந்து மதுரையில் வளர்ந்தார். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.[1] தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விசயகாந்து தனது பதின்ம வயதில் சிறுசிறு பணிகளைச் செய்துவந்தார்.

மண வாழ்க்கை

விசயகாந்து, 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.[2] இவர்களுக்கு விசய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இருமகன்கள் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை

1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்.[சான்று தேவை]

அரசியல் கட்சி

2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.[3]

2006 ஆம் ஆண்டு தேர்தல்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.[4]

2011 ஆம் ஆண்டு தேர்தல்

பின்னர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

2016 ஆம் ஆண்டு தேர்தல்

பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். இவர் அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[5] அத்தேர்தலில் இவர் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் இவரும், இவருடைய கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தனர். இவர் போட்டியிட்ட உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில், 34,447 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்

திரைப்பட வாழ்க்கை

இயக்குநர் காஜா 'விஜயராஜ்' என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார்.[1] திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார்.[சான்று தேவை] 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம் தான் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியைத் தந்தது.

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "ரஜினி, கமலுக்கிடையே விஜயகாந்த் வல்லரசானது எப்படி?". Vikatan. 25 August 2016. http://www.vikatan.com/news/tamilnadu/67584-vijayaraj-to-captain---journey-of-vijayakanth-hbdcaptain.html. பார்த்த நாள்: 11 February 2017. 
  2. "விஜயகாந்த்".
  3. "தேமுதிக வரலாறு".
  4. "DMDK chief Vijayakanth loses Ulundurpettai assembly seat, deposit".
  5. "'Captain' to steer third front in T.N., strikes deal with PWF".The Hindu (MARCH 23, 2016)

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயகாந்து&oldid=3393083" இருந்து மீள்விக்கப்பட்டது