பிரேமலதா விஜயகாந்த்
Appearance
(பிரேமலதா விசயகாந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரேமலதா | |
---|---|
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் 3வது பொதுச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 திசம்பர் 2023 | |
தலைவர் | விஜயகாந்த் |
முன்னையவர் | விஜயகாந்த் |
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் பொருளாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 அக்தோபர் 2018 | |
முன்னையவர் | ஏ. ஆர். இளங்கோவன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சென்னை, சென்னை மாநிலம், இந்தியா (தற்போதைய சென்னை, தமிழ்நாடு) | 18 மார்ச்சு 1969
அரசியல் கட்சி | தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் |
துணைவர்(கள்) | விஜயகாந்த் (தி. 1990; இற. 2023) |
பிள்ளைகள் | சண்முகபாண்டியன் மற்றும் விஜய் பிரபாகரன் |
வாழிடம்(s) | 54 – 12ஏ, கண்ணம்மாள் தெரு, சென்னை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
புனைப்பெயர் | அண்ணியார் |
பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) ஓர் இந்திய அரசியல்வாதியும், நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்தின் மனைவியாவார். இவர் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். தேசிய அளவிலான தனித்திறன் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனையும் ஆவார்.[சான்று தேவை] 1990 சனவரி 31 அன்று விஜயகாந்த் பிரேமலதாவை மணந்தார். இவர்களது திருமணம் மதுரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. கருணாநிதி தலைமையில் நடந்தது.[1] விஜயகாந்த் - பிரேமலதா இணையருக்கு விஜய் பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். பிரேமலதா தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளராகத் திகழ்ந்தார்.[2][2][3] இவர் 2018 இல் கட்சியின் பொருளாளராகவும், 2023 இல் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
[தொகு]தேர்தல் | சட்டமன்றத் தொகுதி | கட்சி | முடிவுகள் | வாக்குகள் % | எதிர்த்து போட்டியிட்டவர் | எதிர்த்து போட்டியிட்டவர் கட்சி | வாக்குகள் % |
---|---|---|---|---|---|---|---|
2021 | விருத்தாச்சலம் | தேமுதிக | தோல்வி | 13.17 % | ஆர். இராதாகிருஷ்ணன் | இந்திய தேசிய காங்கிரசு | 39.17 % |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பிரேமலதா விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு". சமயம் செய்திகள். 9 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 2.0 2.1 "தேசிய முற்போக்கு திராவிட கழகம்". விகடன். பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Premalatha Vijayakanth Wiki, Biography, Age, Caste, Images". Newsbugz. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)