உள்ளடக்கத்துக்குச் செல்

கேப்டன் பிரபாகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்டன் பிரபாகரன்
இயக்கம்ஆர். கே. செல்வமணி
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
சரத்குமார்
ரம்யா கிருஷ்ணன்
மன்சூர் அலி கான்
வெளியீடு1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கேப்டன் பிரபாகரன் என்பது 1991 ஆம் ஆண்டு ஆர். கே. செல்வமணி இயக்கிய இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இதில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விசயகாந்து கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் மன்சூர் அலி கான், அறிமுகமானார். ரூபினி (நடிகை), லிவிங்ஸ்டன் (நடிகர்), ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். நடிகர் சரத்குமார் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் நடிகர் விசயகாந்து நடித்த 100 வது படமாகும். இப்படம் மூலம் விசயகாந்து " கேப்டன்" எனும் அடைமொழியைப் பெற்றார்.[1][2][3]

படத்தின் சிறப்பு

[தொகு]

மன்சூர் அலி கான் நடித்த வீரபத்திரன் என்ற வில்லன் கதாபாத்திரம் சந்தனமரம், யானைத் தந்தம் கடத்தலில் ஈடுபட்ட வனப் போராளி வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தின் தலைப்பான " கேப்டன் பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மீது கொண்ட பற்றின் காரணமாக வைக்கப்பட்டது. இப்படம் திரையரங்குகளில் வெளியான நேரத்தில், கிட்டத்தட்ட 300 நாட்களுக்கும் மேல் ஓடி பெரும் வெற்றி பெற்றது.

கதைச் சுருக்கம்

[தொகு]

சத்தியமங்கலம் பகுதியில் சந்தன மரம் மற்றும் யானைத் தந்தம் ஆகியவற்றை கடத்தி காட்டுவாழ் மக்களை துன்புறுத்தி வருகிறான் " வீரபத்திரன்" எனும் வனக் கொள்ளைக்காரன், அவனை பிடிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது அரசு ‌‌ . இச்சமயத்தில் சென்னையில் இருக்கும் இந்திய வனப் பணி அதிகாரி ராஜாராம் அங்கே வீரபத்திரனை பிடிக்க பணிக்கப்படுகிறார். இதற்கு காரணம் தனது சக நண்பன் பிரபாகரனுக்கு அமைச்சர் மகளை அவர்களது விருப்பப்படி கல்யாணம் செய்து வைக்கிறார். இதனால் அவர் அங்கே செல்ல பணிக்கப்படுகிறார்.அங்கே பழங்குடி பெண் ஒருத்தி மீது காதல் கொள்கிறார் ராஜாராம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக வீரபத்திரனால் கொல்லப்படுகிறார் ராஜாராம், அதற்காக பிரபாகரன் வீரபத்திரனை பிடிக்க சத்தியமங்கலம் செல்ல விரும்பி பணியை ஏற்று போகிறார். அங்கே அவர் வீரபத்திரனை பிடித்தாரா? வீரபத்திரன் பின்னால் இருக்கும் அரசியல் சூழ்ச்சி என்ன? , இதனால் இருவருக்கும் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதில் இருந்து மீள்வதே மீதிக்கதை.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

புலன் விசாரணை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து , ராவுத்தர் விசயகாந்துடனும் ஆர்கே செல்வமணியோடும் கேப்டன் பிரபாகரன் எனும் பெயரில் படத்தை தொடங்கினார், கதைக்கரு வனப்போராளி வீரப்பனை மையமாகக் கொண்டது.அதுமட்டுமன்றி இது கேப்டன் விஜயகாந்தின் 100வது திரைப்படமாகும். படப்பிடிப்பு கேரள மாநிலம் சாலக்குடி பகுதியில் 60 நாட்கள் நடந்தது,நிறைய காட்சிகள் அதிரப்பள்ளி அருவியிலும் படமாக்கப்பட்டது .இப்படத்தில் மன்சூர் அலி கான் தனது முதல் முக்கிய வேடத்தில் நடித்தார்.படப்பிடிப்பின் போது விசயகாந்து கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவர் வலியால் கதறினார், ஆனால் இது நடிப்பு என்று தவறாக கருதப்பட்டது, இதனால் மருத்துவ உதவி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.சரண்யா பொன்வண்ணன்தான் முதலில் பூங்கொடி வேடத்தில் நடித்தார், ஆனால் அந்த பாத்திரம் கவர்ச்சியாக இருந்ததால் படத்திலிருந்து விலகினார்.ஆகையால் அந்த பாத்திரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கு சென்றது

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. இரண்டும் இசைஞானி இளையராஜா இசையில், கங்கை அமரன் மற்றும் பிறைசூடன் ஆகியோரின் வரிகளில் அமைந்தது. ஆட்டமா தேரோட்டமா பாடல் சிந்துபைரவி எனும் கருநாடக இராகத்தில் அமைக்கப்பட்டது.[4][5] மேலும் இப்பாடல் 2008 இல் வெளிவந்த சிங்ககுட்டி திரைப்படத்தில் பிரசன்ன சேகரால் மறுஆக்கம் செய்யப்பட்டது.[6]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "பாசமுள்ள பாண்டியரே"  கங்கை அமரன்மனோ, கே. எஸ். சித்ரா 5:09
2. "ஆட்டமா தேரோட்டமா"  பிறைசூடன்சுவர்ணலதா 5:12
மொத்த நீளம்:
10:21

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Film editor G. Jayachandran dead". தி இந்து. 25 June 2020 இம் மூலத்தில் இருந்து 28 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200628085214/https://www.thehindu.com/news/national/tamil-nadu/film-editor-g-jayachandran-dead/article31914312.ece. 
  2. "Vijayakanth vs 'Virumaandi'". தி இந்து. 12 January 2004 இம் மூலத்தில் இருந்து 13 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210813104247/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/vijayakanth-vs-virumaandi/article28187984.ece. 
  3. "Quizzing with K-Circle". தி இந்து. 6 March 2012 இம் மூலத்தில் இருந்து 13 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210813104254/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/quizzing-with-kcircle/article2965018.ece. 
  4. Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Chennai: Pichhamal Chintamani. p. 125. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.
  5. Charulatha Mani (10 மே 2013). "Light and melodious". தி இந்து இம் மூலத்தில் இருந்து 24 சனவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210124042709/https://www.thehindu.com/features/friday-review/music/light-and-melodious/article4702358.ece. 
  6. "Well picturised". தி இந்து. 20 பெப்பிரவரி 2008 இம் மூலத்தில் இருந்து 13 ஆகத்து 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210813104232/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/Well-picturised/article15374159.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்டன்_பிரபாகரன்&oldid=3949473" இலிருந்து மீள்விக்கப்பட்டது