உள்ளடக்கத்துக்குச் செல்

பீலி சிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீலி சிவம்
பிறப்புபி. எல். சிவனப்பன்
5 சூலை 1938
ஈரோடு தமிழ்நாடு, இந்தியா
இறப்பு25 செப்டம்பர் 2017
(aged 79)
வேலூர், தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட நடிகர், தொலைக்காட்சி நடிகர், நாடக நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1958–2017

பீலி சிவம் என்ற மேடைப் பெயரால் அறியப்படும் பி. எல். சிவனப்பன் (5 சூலை 1938 - 25 செப்டம்பர் 2017) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார்.[1] இவர் 1958 முதல் 2017 வரை சுமார் 400 தமிழ் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார். முகம்மது பின் துக்ளக் (1971) மல்லிகைப் பூ (1973), தூரத்து இடிமுழக்கம் (1980), பொய் சாட்சி (1982), முந்தானை முடிச்சு (1983), இமைகள் (1983), அழகன் (1991), எஜமான் (1993), உள்ளிட்டப் பல படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். நாடகத்துறையின் சிறந்த நடிகராக தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1995 ஆம் ஆண்டு பெற்றார்.

துவக்ககால வாழ்க்கை

[தொகு]

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் பண்ணாரிக்கு அருகிலுள்ள புதுப்பீர்கடவு என்ற சிற்றூரில் பிறந்த சிவனப்பனுக்கு, சிறு வயதிலேயே நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது. பின்னர், புரட்சித் தலைவர் எம். ஜி. இராமச்சந்திரன் நாடகங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ​​பின்னர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் நடித்தார். திரைப்பட ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பீலி சிவம் தமிழ் நாடகத்துறையிலிருந்து வந்த நடிகர்கள் தலைமுறையைச் சேர்ந்தவர். இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.[2]

திரைப்படங்கள்

[தொகு]

200இக்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராகவும், எதிர்மறைப் பாத்திரங்கள், குணச்சித்திர வேடங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார். விஜயகாந்துடன் இணைந்து தூரத்து இடிமுழக்கம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த இவர், சோவின் முகம்மது பின் துக்ளக் மற்றும் கே. பாக்யராஜ் பொய் சாட்சி, முந்தானை முடிச்சு ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இவர் ஏராளமான தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். இவர் விஜயகாந்துடன் கேப்டன் பிரபாகரன், நெஞ்சில் துணிவிருந்தால், பெரிய மருது படத்திலும், அவர் முதன் முதலில் இயக்கிய விருதகிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.[3]

மறைவு

[தொகு]

25 செப்டம்பர் 2017 அன்று உடல்நலக் குறைவு காரணமாக தனது 79 ஆவது அகவையில் மதுரையில் காலமானார்.

திரைப்படவியல்

[தொகு]

இது பகுதி திரைப்படவியலாகும். நீங்கள் இதை விரிவாக்கலாம்..

திரைப்படங்கள்

1970கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1970 எதிரொலி மருத்துவர் திரைப்படத்தில் அறிமுகம்
1971 முகமது பின் துக்ளக் இப்னு பதூதா/ராகவன்
1973 மல்லிகைப் பூ
1973 தெய்வாம்சம் தோழிற்சங்கத் தலைவர்
1974 நேற்று இன்று நாளை
1974 சிரித்து வாழ வேண்டும் லஞ்ச ஒழிப்பு அதிகாரி
1975 நினைத்ததை முடிப்பவன்' மூத்த காவல் அதிகாரி
1975 இதயக்கனி
1975 எடுப்பார் கைப்பிள்ளை
1975 நாளை நமதே
1976 நீதிக்கு தலைவணங்கு
1976 துணிவே துணை தொடர்வண்டி நிலைய அதிகாரி
1976 மோகம் முப்பது வருஷம் விமளாவின் கணவர்
1976 குமார விஜயம்
1977 நவரத்தினம்
1977 இன்றுபோல் என்றும் வாழ்க
1977 ஸ்ரீ கிருஷ்ண லீலா
1978 சங்கர் சலீம் சைமன் ரசாக் பாய்
1979 வீட்டுக்கு வீடு வாசப்படி

1980கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1980 தூரத்து இடிமுழக்கம் மாரி
1980 ரிஷிமூலம்
1981 அனிச்சமலர்
1981 நெஞ்சில் துணிவிருந்தால்
1981 கரையெல்லாம் செண்பகப்பூ காவல் ஆய்வாளர்
1982 ஹிட்லர் உமாநாத்
1982 பொய் சாட்சி முருகப்பன்
1983 முந்தானை முடிச்சு மருத்துவர்
1983 இமைகள்
1983 சமயபுரத்தாளே சாட்சி
1984 நான் மகான் அல்ல கோபிநாத்
1984 நன்றி
1984 நினைவுகள்
1985 பிள்ளைநிலா
1985 ஸ்ரீ ராகவேந்திரா
1986 முதல் வசந்தம்
1987 சின்னக்குயில் பாடுது
1988 பார்த்தால் பசு
1988 ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் முத்து
1989 மனசுக்கேத்த மகராசா

1990கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1990 புலன் விசாரணை சிவகுரு
1991 கேப்டன் பிரபாகரன் ராஜா
1991 அழகன்
1992 சிங்கார வேலன் ஆய்வாளர்
1992 நாடோடிப் பாட்டுக்காரன்
1992 எல்லைச்சாமி
1993 இதய நாயகன்
1993 தங்க பாப்பா வழக்கறிஞர்
1993 ராஜதுரை
1994 சிந்துநதிப் பூ
1994 இளைஞர் அணி
1994 வீரமணி
1994 பெரிய மருது காவல் ஆய்வாளர்
1995 கருப்பு நிலா
1995 காந்தி பிறந்த மண்
1996 வெற்றி விநாயகர் இந்திரன்/தேவேந்திரன்
1996 ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே காவல் ஆய்வளர்
1996 தாயகம் சக்திவேலின் தந்தை
1997 அபிமன்யு
1997 கங்கா கௌரி
1997 பாசமுள்ள பாண்டியரே
1999 தினமும் என்னை கவனி
1999 முகம்

2000கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2000 வல்லரசு காவல் ஆணையர்
2002 ஏழுமலை லட்சுமி மற்றும் சந்தியாவின் தந்தை
2003 ஆஞ்சநேயா கல்வித் துறை அலுவலர்
2004 கம்பீரம்
2006 தர்மபுரி பள்ளி ஆசிரியர்
2008 எழுதியதாரடி தேவியின் தந்தை

2010கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2010 விருதகிரி விருதகிரியின் தந்தை கடைசி படம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பழம்பெரும் நடிகர் பீலிசிவம் உடல்நலக் குறைவால் காலமானார்". தினமணி. 25 செப்டம்பர் 2017. Retrieved 26 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "Andru Kanda Mugham – Tamil News". antrukandamugam.wordpress.com. 2015-03-01. Retrieved 2020-01-23.
  3. "தமிழ் சினிமா மூத்த நடிகர் பீலி சிவம் காலமானார்..!". விகடன். 25 செப்டம்பர் 2017. Retrieved 26 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீலி_சிவம்&oldid=4305410" இலிருந்து மீள்விக்கப்பட்டது