உள்ளடக்கத்துக்குச் செல்

ப. தனபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப. தனபால்
சட்டப்பேரவைத் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
2012–2016
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்வி. முத்து
தொகுதிசங்ககிரி
பதவியில்
1980–1984
பதவியில்
1984–1989
பின்னவர்ஆர். வரதராஜன்
பதவியில்
2001–2006
முன்னையவர்வி. முத்து
பின்னவர்வி. பி. துரைசாமி
பதவியில்
2011–2016
முன்னையவர்கே. பி. இராமசாமி
பின்னவர்வி. சரோஜா
தொகுதிஇராசிபுரம்
பதவியில்
2016–2021
முன்னையவர்ஏ. கருப்புசாமி
தொகுதிஅவினாசி
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 16, 1951 (1951-05-16) (அகவை 74)
சேலம், கருப்பூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅதிமுக
துணைவர்கலைச்செல்வி
பிள்ளைகள்லோகேசு தமிழ்ச்செல்வன், திவ்யா
முன்னாள் மாணவர்முதுகலை, அரசுக் கலைக் கல்லூரி, சேலம்-7

ப. தனபால் (P. Dhanapal) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவரும் ஆவார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக

[தொகு]

2011 ஆம் ஆண்டில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பேரவையின் துணைத் தலைவராகப் பதவி வகித்த இவர் சட்டப்பேரவைத் தலைவர் டி. ஜெயக்குமார் பதவி விலகியதை அடுத்து அக்டோபர் 10, 2012 அன்று தமிழக சட்டப்பேரவையின் 19 ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2016 மற்றும் 2021ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

தமிழக அமைச்சராக

[தொகு]

2001 ஆம் ஆண்டு அரசமைத்த அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]

அதிமுக தொடங்கிய காலத்தில், 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் 1951 ஆம் ஆண்டு மே 16, அன்று சேலம் கருப்பூரில் பழனி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சேலம் அரசினர் உயர்நிலைப்பள்ளி, கருப்பூரில் 1968ம் ஆண்டு பள்ளிப்படிப்பையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1975ம் ஆண்டு வரலாற்றில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார் இவருக்குக் கலைச்செல்வி என்ற மனைவியும், லோகேசு தமிழ்செல்வன் என்கிற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "87 - சங்ககிரி". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/election-2021/salem/640690-87.html. பார்த்த நாள்: 28 August 2025. 
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 99-100.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 383-385.{{cite book}}: CS1 maint: year (link)

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._தனபால்&oldid=4416759" இலிருந்து மீள்விக்கப்பட்டது