பெருநற்கிள்ளி, இராசசூயம் வேட்ட சோழன்
Appearance
(சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன் ஆவான். இவனைப் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் நான்கு உள்ளன. இராசசூயம் என்பது நாட்டை விரிவுபடுத்த அரசன் செய்யும் வேள்வி.
- பகைநாட்டை இவன் பட்டப்பகலில் தீயிட்டுக் கொளுத்தியது ‘சுடுதீ விளக்கம்’ [1] இவனது யானைகள் வள்ளை, ஆம்பல் பகன்றை, பாகல், கரும்பு நிறைந்த பகை நாட்டு வயல்களைப் பாழாக்கினவாம்.[2]
- இவனுக்கும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, மலையமான் திருமுடிக்காரி சோழனுக்கு உதவியாக நின்று போரிட்டுச் சோழனுக்கு வெற்றி உண்டாக்கியிருக்கிறான்.[3]
- சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய இருவரும் இவனது நண்பர்கள். இவர்கள் பார்பனர் வளர்க்கும் முத்தீப் போல ஓரிடத்தில் கூடியிருந்தனர்.[4]
- மணியும், முத்தும், பொன்னும் இரவலர்களுக்குக் கனவா நனவா என மருளும்படி வாரி வழங்கியவன்.[5]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ சுடாத தீ விளக்கம் ஞாயிறும் திங்களும்
- ↑ பாண்டரங் கண்ணனார் புறநானூறு 16
- ↑ வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் புறநானூறு 125
- ↑ ஔவையார் புறநானூறு 367
- ↑ உலோச்சனார் புறநானூறு 377