சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
Appearance
இளஞ்சேட்சென்னி என்னும் பெயருடன் விளங்கும் சோழ மன்னர்கள் ஐவருள் சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி என்பவனும் ஒருவன் ஆவான்.
பாமுள்ளூர் என்பது சேர அரசன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஊர். இவ்வூர்க் கோட்டையை வென்றழித்த காரணத்தால் இவன் இந்த அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறான்.
புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இவனைக் கண்டு பாடி, சில அறிவுரைகளும் கூறி, பரிசில் வழங்குமாறு வேண்டுகிறார்.[1]
- மாற்றார் மதில்களைக் கைப்பற்றுமுன்பே இரவலர்களுக்கு அதனைப் பரிசாக வழங்கும் பண்புள்ளவனாம்.
- முன்பே பரிசில் பெற்றுச்சென்றார் என எண்ணிப் பார்க்காமல் வழங்க வேண்டுமாம்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ பாடல் புறநானூறு 203