உள்ளடக்கத்துக்குச் செல்

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவன் சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். இவன் செய்த போர் பற்றியும். இவனது இயல்புகள் பற்றியும் ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாடிய பாடல்கள் இரண்டு புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

இளஞ்சேட்சென்னி என்னும் பெயருடன் ஐந்து சோழ மன்னர்கள் உள்ளனர்.

போர்க்களம் [1]
  • இந்தச் சென்னி உழவர் மாடுகளை நடத்தி வைக்கோலைப் போரடிப்பது போல, யானைகளை நடத்தி பிணங்கல் மேல் போரடித்துக்கொண்டிருந்தான். புலவர் ஊன்பொதி பசுங்குடையார் அந்தப் போர்களத்துக்குச் சென்று யானைகளைப் பரிசாகக் கேட்டுப் பெற்றிருக்கிறார்.
வெற்றியும் கொடையும் [2]
  • தென்பால் பரதவரின் வலிமையை ஒடுக்கினான். தென்பரதவர் மிடல்சாய
  • வடபால் வடுகர் தாக்குதலை வாள் போரால் முறியடித்தான். வடவடுகர் வாளோட்டிய
  • தன் வெற்றியைப் பாடிய புலவர்க்கு பல அணிகலன்களை இவன் வழங்கினான். அவற்றை எங்கே அணிந்துகொள்வது என்றுகூட அவர்களுக்குத் தெரியாத அளவுக்கு வழங்கினான்.[3]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. புறநானூறு 370
  2. புறநானூறு 378
  3. இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது இராமனுக்கு வழிகாட்டும் அடையாளமாகச் சீதை ஆங்காங்கே ஒவ்வொன்றாகப் போட்டுச் சென்ற அணிகலன்களைப் பார்த்த குரங்குகள் அவற்றை விரலிலும் - காதிலும், கழுத்திலும் – இடுப்பிலும் மாற்றி அணிந்துகொண்டது போல புலவரின் சுற்றம் இந்தச் சோழன் தந்த அணிகலன்களை அணிந்துகொண்டார்களாம்.