அரியல்
Appearance
அரியல் என்பது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஒருவித பானம்.
அரியல் பற்றிய சங்கப்பாடல் குறிப்புகள்
[தொகு]- இதனைப் புலவர் வேம்பற்றூர்க் குமரனார் 'அரி நிறக் கலுழி' [1] என்று குறிப்பிடுகிறார். அகன்ற வாயுடைய பானையில் பாளை சுரக்கும் நீர் அது என்றும் அதனை விவரிக்கிறார். [2]
அரியற் பெண்டிர்
- அரியல் விற்பவர்கள் அரியல் பெண்டிர். அரியலை அவர்கள் அளந்து ஊற்றி விற்பார்களாம்.
செங்கண் ஆடவர்
- அரியல் பெண்டிரிடம் அரியலை வாங்கி வேண்டிய அளவு குடித்துவிட்டு போரை விரும்பிச் செங்கண் ஆடவர் எதிரொலி கேட்கும்படி ஆரவாரம் செய்வார்களாம்.