உள்ளடக்கத்துக்குச் செல்

சின்னப்பொண்ணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலைமாமணி தஞ்சை சின்னப்பொண்ணு
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சுரானம், சிவகங்கை மாவட்டம்
தொழில்(கள்)மேடைப்பாடகர், திரைப்படப் பின்னணிப் பாடகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1990 முதல்
இணையதளம்www.chinnaponnu.com

சின்னப்பொண்ணு (Chinnaponnu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற இசைக்கலைஞர். இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தவர்.

தனது பதின்மூன்றாம் வயது முதலே கோயில்களிலும் தேவாலயங்களிலும் பாடத்துவங்கிய இவர், பின்னர் கோட்டைச்சாமி குழுவினருடன் இணைந்து பாடத்துவங்கினார். நாட்டுப்புற ஆய்வியலாளர் கே. ஏ. குணசேகரனின் உதவி தமிழ்நாட்டு மேடைகள் பலவற்றிலும் சின்னப்பொண்ணுவின் பாடலை ஒலிக்கச் செய்தது.

2004 ஆம் ஆண்டில் இரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் இவர் பாடிய வாழ்த்துறேன் வாழ்த்துறேன் எனும் பாடல் இவர் திரைத்துறையில் அடியெடுத்து வைத்த நிகழ்வாகும். 2008ஆம் ஆண்டில் காதலில் விழுந்தேன் படத்தில் இவர் பாடிய நாக்கு முக்கா பாடல் மிகவும் புகழ்பெற்றது. "நாக்கு முக்கா"வின் மாறுபட்ட பதிப்பு (மாற்றப்பட்ட பாடல் வரிகளுடன்) சிறிய தி டைம்ஸ் ஆஃப் இந்தியா விளம்பரத் திரைப்படமான எ டே இன் தி லைப் ஆப் சென்னை என்ற தலைப்பில் இடம்பெற்றது. இது 2009-இல் கேன்சில் இரண்டு தங்க சிங்கங்க விருதுகளை வென்றது.[1][2] பாலிவுட் சிறந்தப் படமான தி டர்ட்டி பிக்சரில் கூட இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது.

2010 ஆம் ஆண்டில், எஸ். எஸ். பாண்டியன் இயக்கிய சூரியன் சட்டக் கல்லூரி திரைப்படத்தின் "தீக தீக" பாடலுக்காக 2010ஆம் ஆண்டு பதிப்பு விருதை வென்றார். இதே ஆண்டில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய காணொளியுடன், ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010க்கான பாடலில் இடம்பெற்ற கலைஞர்களில் இவரும் ஒருவர்.[3]

2011ஆம் ஆண்டு சூன் மாதம் இவர் எம் டிவி கோக் ஸ்டுடியோ நிகழ்ச்சியில் கைலேஷ் கெர் உடன் இணைந்து பாடல்களைப் பாடினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1990இல் சின்னப்பொண்ணு இசையமைப்பாளரும் தாள வாத்தியக் கலைஞருமான செல்வ குமாரை (பொதுவாக குமார் என்ற பெயரில் பாடுபவர்) தஞ்சாவூர் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். அன்றிலிருந்து இவர்கள் ஒன்றாக இசையமைத்து இணைந்து நடித்துள்ளனர்.

2008-இல் சின்னப்பொண்ணு ஒரு கடுமையான வாகன விபத்தில் சிக்கினார். இதில் இவரது வாகன ஓட்டுநர் கொல்லப்பட்டார். சின்னப்பொண்ணு தலையில் காயம் அடைந்தார். பல வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சில மாதங்களுக்குள் மீண்டும் நிகழ்ச்சியினைத் தொடர்ந்தார்.[4]

2021ஆம் ஆண்டில், சின்னபொண்ணு மெய்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் 5-இல் பங்கேற்றார். 4 வாரங்கள் இந்நிகழ்விற்கான வீட்டில் வாழ்ந்த ஒரே வயதான பெண் போட்டியாளர் இவர் ஆவார். 2023ல் ஜீ தமிழ் சூப்பர் ஜோடியில் சின்னபொண்ணு பங்கேற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "TOI wins India its first Gold Film Lions at Cannes". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2012-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405211513/http://articles.timesofindia.indiatimes.com/2009-06-28/india/28159732_1_jwt-india-agnello-dias-taproot-india. 
  2. "A Day in the Life of Chennai". Archived from the original on 14 February 2022. பார்க்கப்பட்ட நாள் 8 April 2011.
  3. Chinna Ponnu on cloud nine
  4. The Hindu (14 November 2008). "Singer Injured in Road Accident". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 20 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110920150932/http://www.hindu.com/2008/11/14/stories/2008111461490800.htm. பார்த்த நாள்: 8 April 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னப்பொண்ணு&oldid=3992438" இலிருந்து மீள்விக்கப்பட்டது