லாடனேந்தல்
லாடனேந்தல், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், லாடனேந்தல் ஊராட்சியில், வைகை ஆற்றின் கரையில் அமைந்த வருவாய் கிராமம் ஆகும்.[1]
இதன் அஞ்சல் சுட்டு எண் 630 611; தொலைபேசி குறியீடு எண் 04574 ஆகும். லாடனேந்தல், மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இதன் அஞ்சலகம் திருப்புவனத்தில் உள்ளது.
இதன் அருகமைந்த சிற்றூர்கள்: பாப்பாக்குடி, மேலச்சொரிக்குளம், கீழசொரிக்குளம், தூதை, திருப்பாச்சேத்தி, கலியாந்தூர், அல்லிநகரம் ஓடாத்தூர், கானூர், பிரமனூர் ஆகும். அருகமைந்த நகரங்கள்:மதுரை, மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகும்.
போக்குவரத்து
[தொகு]மதுரை - இராமேஸ்வரம தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த லாடனேந்தல் கிராமம், மதுரையிலிருந்து 18 கிமீ தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 24 கிமீ தொலைவிலும், திருப்புவனத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது. மதுரையிலிருந்து, திருப்புவனம் வழியாக லாடனேந்தலுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையங்கள், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகும்.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, லாடனேந்தல் சிற்றூரின் மொத்த மக்கள்தொகை 4,289 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 307 (7.2%) ஆக உள்ளனர். பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 881 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 80.35% ஆக உள்ளது. ஆறு வயதிற்குட்டபட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 453 ஆகும்.[2]
வங்கிகள்
[தொகு]- சிவகங்கை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, லாடனேந்தல் கிளை
- கனரா வங்கி, லாடனேந்தல் கிளை
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]- வீரமாகாளியம்மன் கோயில்
- முத்தையா (எ) முத்து கருப்பணசாமி கோயில்
- காமாட்சி அம்மன் கோயில்
- மந்தை விநாயகர் கோயில்
- முனியாண்டி, அய்யனார், ஊர்க்காவலன் கோயில்கள்
- பூங்காவனம் மாரியம்மன் கோயில்
கல்வி நிலையங்கள்
[தொகு]- வேலம்மாள் உறைவிடப்பள்ளி [3]
- ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி
- அரசு உயர்நிலைப்பள்ளி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ladanendal
- ↑ Ladanendal Population, Caste, Working Data Sivaganga, Tamil Nadu - Census 2011
- ↑ VELAMMAL RESIDENTIAL SCHOOL