பூவந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூவந்தி (Poovanthi), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பூவந்தி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். [1] பூவந்தி, மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி) க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

வரிச்சியூர் வழியாக, மதுரை - சிவகங்கை செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 33 மற்றும் திருப்புவனம் வழியாக மதுரை - சிவகங்கை செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 85ல் பூவந்தி உள்ளது. பூவந்தி, மதுரையிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. பூவந்தியின் அஞ்சல் சுட்டு எண் 630611 ஆகும். இதன் தொலைபேசி குறியீடு எண் 04574 (STD) ஆகும்.

மதுரை மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்த பூவந்தி அருகில் உள்ள ஊர்கள்: திருப்புவனம் (4கிமீ), வரிச்சியூர் (4 கிமீ), லாடனேந்தல் (7 கிமீ); அருகமைந்த நகரங்கள் மதுரை (18 கிமீ) மற்றும் சிவகங்கை (26 கிமீ) ஆகும். பூவந்திக்கு அருகில் உள்ள தொடருந்து நிலையம் மதுரை மற்றும் திருப்புவனம் ஆகும்.

பூவந்திக்கு வடக்கே மேலூர் ஊராட்சி ஒன்றியம், கிழக்கே சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மேற்கே மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் தெற்கே மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

கல்வி நிலையங்கள்[தொகு]

  • அரசு உயர்நிலைப்பள்ளி, பூவந்தி
  • விக்கிரம் பொறியியல் கல்லூரி

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கட்தொகை தொகை கணக்கெடுப்பின்படி, பூவந்தி ஊராட்சியின் மொத்த மக்கள்தொகை 3655 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 595 ஆகவுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Poovanthi

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவந்தி&oldid=2515753" இருந்து மீள்விக்கப்பட்டது