வரிச்சியூர்
வரிச்சியூர் Varichiyur | |
---|---|
ஆள்கூறுகள்: 9°54′37″N 78°15′24″E / 9.9102°N 78.2568°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 168 m (551 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,338 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625020 |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, குன்னத்தூர், நாட்டார்மங்கலம், செங்கோட்டை, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், பூவந்தி, களிமங்கலம் மற்றும் வரிச்சியூர் |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்ற உறுப்பினர் | பி. மூர்த்தி |
இணையதளம் | https://madurai.nic.in |
வரிச்சியூர் என்பது தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மதுரை (வடக்கு) வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், வரிச்சியூர் ஊராட்சியில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 168 மீட்டர் உயரத்தில், 9°54′37″N 78°15′24″E / 9.9102°N 78.2568°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு வரிச்சியூர் புறநகர்ப் பகுதி அமைந்துள்ளது.
வரிச்சியூர் கிராமம், மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. வரிச்சியூர், மதுரை - தொண்டி மாநில நெடுஞ்சாலை எண் 33ல் அமைந்துள்ளது. இக்கிராமம் மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
இதனருகில் அமைந்த கிராமங்கள், குன்னத்தூர், களிமங்கலம், பூவந்தி, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், நாட்டார்மங்கலம், செங்கோட்டை மற்றும் இடையபட்டி ஆகும்.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வரிச்சியூர் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2,338 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 111 (4.75%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.26% ஆகும். வரிச்சியூரில் 594 வீடுகள் உள்ளன. [2]