அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
ACCET, Karaikudi
வகைஅண்ணா பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த கல்லூரி
உருவாக்கம்1952
அமைவிடம்காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா
இணையதளம்http://www.accet.net

அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Alagappa Chettiar College of Engineering and Technology) தமிழ்நாடு காரைக்குடியில் அமைந்துள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த முனைவர் ஆர்.எம்.அழகப்ப செட்டியார் உருவாக்கிய பல கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

வரலாற்றுக் காலக்கோடு[தொகு]

  • இக்கல்லூரி 1952, ஜூலை 21-ஆம் நாள் தொடங்கப் பெற்றது.
  • கல்லூரியின் பிரதான கட்டிடத்தை அன்றைய குடியரசுத்தலைவர் முனைவர் இராசேந்திர பிரசாத் 1953-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
  • 1966 ஆம் ஆண்டு இக்கல்லூரி தமிழ்நாடு அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
  • 1983-ஆம் ஆண்டு நுண்ணலை மற்றும் ஒளியியல் பொறியியல் (Microwave and Optical Engineering) பட்டமேற்படிப்பு (M.E) தொடங்கப்பட்டது.
  • 2001-ஆம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் பொறியியல் படிப்பு (B.E Computer Science) தொடங்கப்பட்டது.