காளையார் கோவில்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
காளையார்கோவில், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்ட நிர்வாகத் தலைமையிடமான காளையார்கோயில் நகரத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுத்தலம்.
இக்கோயில் மூலவர் பெயர் சொர்ணகாளீஸரர் ஆகும். இது மருதுபாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இங்கு சிவகங்கை ராஜா குடும்பத்தினருக்குச் சொந்தமான பெரியசிவன்கோவில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் சிவகங்கை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரால் பராமரிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள முக்கியமான இடங்களில் காளையார்கோவிலும் ஒன்று.
அமைவிடம்
[தொகு]சிவகங்கையிலிருந்து 18 கிலோமீட்டர் கிழக்காக காளையார்கோவில் அமைந்துள்ளது. பரமக்குடியிலிருந்து வடக்கு திசையிலிருந்து 37கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. காரைக்குடிக்கு தெற்கு திசையில் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கோவிலின் அமைப்பு
[தொகு]காளையார்கோவில் என்ற பெயர் சிவபெருமானின் காளைமாடு சுந்தருக்கு வழி காட்டியதால் இந்த இடத்திற்கு இந்த பெயர் வந்துள்ளது. சங்க காலத்தில் இந்த ஊரின் பெயர் திருக்கானபேர் என வழங்கப்பட்டதை அயூர் மூலக்கிழார் பாடிய புறநானூறு பாடல்கள் மூலம் அறிய முடியும். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்களில் சிவனை காளையாக உருவகித்து பாடியதால் இக்கோவிலின் தெய்வமான சிவன் காளையார் என வழங்கப்பட்டது. இதில் ‘யார் ’ என்பது தமிழில் மரியாதைக்குரிய சொல்லாக கருதப்படுகிறது.
கோபுர அமைப்பு
[தொகு]கோவிலின் இராஜகோபுரமானது 150 அடி உயரம் கொண்டது. ஆனைமடு என்ற பெயரில் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள நீராழி மண்டபத்தை உள்ளடக்கிய தெப்பக்குளமானது கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இந்திரனின் யானையான ஐராவதத்தால் இந்த தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.
இக்கோவிலில் மூன்று தெய்வங்களான ஆக்கல், காத்தல், அழித்தல் கடவுள்களான காளீஸ்வர்ர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் ஆகிய மூவரும் ஒருங்கே அமைந்துள்ளன. அதைப்போலவே அன்னை பார்வதி தேவியும், சொர்ணாம்பிகை, சௌந்தி நாயகி, மீனாட்சி ஆகிய மூன்று தெய்வங்களாக ஒருங்கே அமைந்துள்ளனர். மேலும் வெளி மண்டபத்தில் மூன்று ஆண் தெய்வங்களும் மூன்று பெண் தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளனர்.
வரலாறு
[தொகு]சங்க காலத்தில் காளையார்கோவில் வேங்கை மார்பன் என்ற அரசரால் ஆளப்பட்டது. பிறகு மன்னர் முத்து வடுக நாதராலும், மருது சகோதரர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. கி.பி.1772 ஜூன் 25-ல் முத்துவடுக நாத தேவரும், மருதுசகோதரர்களும் ஆங்கிலேயர்களான ஜோசப் ஸ்மித் மற்றம் போன்ஜார் இவர்களால் தோற்கடிக்கப்பட்டனர். ஆங்கிலேயர்கள் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு சொந்தமான 50000 பகோடாக்கள், தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சிறிது காலத்திற்கு கோயில் அடைக்கப்பட்டு வழிபாடுகள் நடக்காமல் இருந்தது. வேகோட்டையை சேர்ந்த ஜமீன்தார் எல்.ஏஆர்.ஆர்.எம்.அருணாச்சலச் செட்டியார் தேவகோட்டை ஜமீன்தார் கோவிலில் இருந்து சன்யாஸம் எடுத்துக்கொண்டு காளையார் கோவில் வேதாந்தமடம் சென்றார். தேவகோட்டை செட்டியார் ஸ்ரீசங்கர செட்டியார்,ஸ்ரீஏஎல்.ஆர்.ஆர். இராமசாமி செட்டியார். ஏஎல்.ஆர்.ஆர்.அருணாச்சல செட்டியார் ஆகியோர் சேர்ந்து தேவகோட்டை ஜமீன்தார் அறக்கட்டளையை நிறுவினார்கள்.இந்த அறக்கட்டறையின் மூலம் சொர்ணகாளீஸ்வர்ர் சொர்ணவள்ளி அம்மனின் கோவிலில் நடைபெறும் தினசரி வழிபாட்டுக்குரிய பூசைப்பொருள்களை வழங்குகின்றனர். தற்பொழுது இந்த அறக்கட்டளைவாரிசாக ஏஎல்.ஏஆர்.ஆ. கே.வி.ஆர்.சின்ன வீரப்பன் செயல்பட்டு வருகிறார்.
திருவிழாக்கள்
[தொகு]காளீஸ்வரர் கோவிலில் தைமாதம் தேர்த்திருவிழா தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதம் சோமேஸ்வரர் , பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஆடிமாதம் தெப்பத்திருவிழா நடைபெறும்.